எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 28 ஜூன், 2014

ரயில் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் இன்று புதுகையில் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை, : மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுகை மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ரயில் கட்டணத்தினை உயர்த்தியதை கண்டித்தும், காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பயணிகள், சரக்கு ரயில் கட்டண உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (27ம் தேதி) கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி ஆணையின்படி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக