எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அனைத்துத் தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் விழாக்களுக்கு அரசு சமமான மரியாதையை அளிக்க வேண்டும் - டாகடர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...


அனைத்துத் தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் விழாக்களுக்கு அரசு சமமான மரியாதையை அளிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
நாட்டின் விடுதலைக்காகவும்,மொழியைக் காக்கவும் சமூக நீதிக்காகவும் போராடிய தலைவர்களின் பிறந்தநாள்,நினைவு நாளை அனுசரிப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சில குறிப்பிட்ட தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு,அரசியல் விழாவாக நடத்தப்படுகிறது.
1996-97 இல் விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கும்போது எதிர்ப்புக் கிளம்பியதாகக் கூறி அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூரை மையமாகக் கொண்டு, தாழத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்ககாக பாடுபட்ட இம்மானுவேல் சேகரன் 1957 இல் படுகொலை செய்யப்பட்டார்.கடந்த 20 ஆண்டுகளாக,அவரது நினைவிடம் உள்ள பரமக்குடியில்  நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.2011-12 இல் நிகழந்த சம்பவத்தின் அடிப்படையில் த்ற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.அதோடு நினைவு நாள் நிகழ்ச்சிக்குச் செல்வோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை இருக்கிறது.
அனைத்து தலைவர்களின் விழாக்களுக்கும் இத்தகைய  நடைமுறையையே காவல்துறை பின்பற்றுமா என்பதே தாழ்த்தப்பட்ட மக்களின் கேள்வியாக உள்ளது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம்,சென்னிமலையில் நடந்த ஒரு நினைவுநாள் விழாவில்,தமிழக அமைச்சர்கள் 9 பேர் கலந்து கொண்டனர்.அங்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுக்கு விழா எடுக்கும்போது மட்டும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.இது தாழத்தப்பட்ட மக்களின் மனநிலையைப் பாதிப்பதாக உள்ளது.
அனைத்து தலைவர்களின் விழாக்களுக்கும் அரசு சமமான மரியாதையைக் கொடுக்க வேண்டும் அரசே விழாவை நடத்துவதோடு,இத்தகைய விழாக்களில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வதற்குப் பதிலாக அந்ததந்த  மாவட்ட ஆட்சியர்களை பங்கேற்கச் செய்யவேண்டும்.இதன்மூலம்  தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.இது தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி தீர்க்கமான முடிவை எடுப்பது அவசியம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக