எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஓட்டப்பிடாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்..


ஓட்டப்பிடாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வழங்கினார்.
இலவச சைக்கிள்
ஓட்டப்பிடாரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறளுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வ.உ.சிதம்பரனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழாவுக்கு ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் விஜயன் வரவேற்று பேசினார்.
கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
விழாவில் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், 65 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 30 ஊனமுற்றோருக்கான இலவச மூன்று சக்கர சைக்கிள், 150 ஊனமுற்றோருக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது புதிய தமிழகம் மாநில இளைஞரணி செயலாளர் வக்கீல் மதுரம் பாஸ்கர், மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் கனகராஜ், கட்சி நிர்வாகிகள் பட்டவராயன், செல்லப்பா, கண்ணன், மாவட்ட ஊனமுற்றோருக்கான ஒருங்கினைப்பாளர் ராஜசெல்வி, யூனியன் ஆணையாளர் சசி சிவானந்தம், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் லதா மாசாணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக