எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மானாமதுரை, பாப்பாங்குளத்தில், வீடுகளை இழந்தவர்களுக்கு, நிவாரண உதவி தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்-டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...


மானாமதுரை, பாப்பாங்குளத்தில், வீடுகளை இழந்தவர்களுக்கு, நிவாரண உதவி தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது;
மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில், 26 வீடுகளை இடித்த சம்பவத்தில், ஊராட்சி தலைவி அம்சவள்ளி, அவரது கணவர் தங்கராஜ் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு, இதுவரை தற்காலிக வீடுகள் கூட அமைத்து தரவில்லை.
அமைச்சர் வைகைசெல்வன், அரசு சார்பில் தலா ஒருவருக்கு ரூ. 60 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். இது போதாது. ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக ரூ.5 முதல் 10 லட்சம் வரை வழங்கவேண்டும். பொது சொத்துக்களை சேதப்படுத் தியதாக, அரசியல் கட்சிகளிடம், அரசு நஷ்ட ஈடு வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அப்படியானால், வீடுகளை இடித்த ஊராட்சி தலைவர், அவரது கணவர், சம்பவத்தில் இருந்த போலீசார், வருவாய்த் துறையினரிடமிருந்து, நஷ்டஈடு தொகையை வசூலிக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை சந்தித்து, விளக்கம் அளிப்பேன். சட்டசபையில், பாப்பாங்குளம் பிரச்னை குறித்து, கேள்வி எழுப்பப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக