எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும்- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல்...


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இம்மானுவேல் சேகரனின்  நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நேற்று அவரது 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதிய தமிழகம்  கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்  வீரவணக்கம் செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம்  டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ  கூறியதாவது:-

டாக்டர் கிருஷ்ணசாமி: இமானுவேல் சேகரன் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனால், சமூகக் கொடுமைக்காக முதலில் குரல் கொடுத்து உயிரை தியாகம் செய்தவர். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.   கடந்த 2011-12 இல் நடந்த சம்பவங்களால்தான் இந்த விழாவை மேலும் சிறப்பாக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த விழா நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இது மக்கள் இயக்கமாகவே மாறிவிடும். அடக்கம், கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இவை இருந்தால்தான் நாம் எதையும் பெற முடியும். பல மாவட்டங்களிலிருந்து இந்த விழாவுக்கு பலரும் வர முடியவில்லை என்றார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக