எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 26 ஜூலை, 2012

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு புதிய தமிழகம் முடிவு



 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு புதிய தமிழகம் கட்சியில் உள்ள 2 எம்எல்ஏக்களும் வாக்களிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரணாப்புக்கு வாக்களிப்பதன்கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

சங்கரன்கோவில் மற்றும் புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா எங்களை தொடர்பு கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை. அதனால் சுதந்திரமாக முடிவெடுத்துள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, என்னிடம் தொலைபேசியில் நேரடியாக ஆதரவு கேட்டார். சங்மா எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. அதனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக