எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 23 ஜூலை, 2012

நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராட்டம் "புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை : ""தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடும் விதத்தில், ஆக., 6ம் தேதி சென்னையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேயிலை தோட்டத் தொழிலாளர் உரிமைக்காக, 1999 ஜூலை 23ல், "புதிய தமிழகம்' தலைமையில், திருநெல்வேலியில் நடந்த பேரணியில், போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி, 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர். அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (இன்று) திருநெல்வேலியில் பேரணி மற்றும் மவுன அஞ்சலி நடக்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த, தமிழக அளவில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, ஆக., 6ம் தேதி சென்னையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறோம். டாஸ்மாக் "பார்' ஒப்பந்த படிவ வினியோகத்தில்,விண்ணப்பங்களை வெளிப்படையாக கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு தருவதாக திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் புகார்கள் வந்துள்ளன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்; அரசு வருமானத்தில் நஷ்டத்தை தரும். தகுதியுடையவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக