எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 24 ஜூலை, 2012

தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமண்டபம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

திருநெல்வேலி : நெல்லை ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கட்சியினருடன் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நெல்லை, கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டரீதியிலான உரிமைகள் அளிக்கப்பட வலியுறுத்தி 99ம் ஆண்டு நெல்லையில் பேரணி நடத்தினோம்.
அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு வயது விக்னேஷ் உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
ஜாதி, மதம், அனைத்தையும் கடந்து ஆற்றில் மூழ்கி இறந்த 17 பேருக்கு நினைவஞ்சலி செலுத்த ஆற்றங்கரையில் இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக