எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 11 நவம்பர், 2011

தென்காசி மேம்பால பணி முடியாவிட்டால் புதிய தமிழகம் ரயில் மறியல் போராட்டம்

தென்காசி:"தென்காசியில் ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்காவிட்டால் புதிய தமிழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என அக்கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கூறினார்.புதிய தமிழகம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி நேற்று இரவு தென்காசி ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்டார். ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே மேம்பாலம் அமைக்கும் பணியை தென்னக ரயில்வே துவக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து கிருஷ்ணசாமியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறும் போது, ""தென்காசியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலத்தை கட்டி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பணி துவங்கியது. கடந்த 6 மாத காலமாக ரயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் தென் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுப்பதில் காலதாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. இன்னும் இரண்டு வாரங்களில் மேம்பால பணி துவக்கப்படாவிட்டால் புதிய தமிழகம் சார்பில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி தென்காசியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.சென்னையில் இருந்து தென்காசிக்கு முன்பு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை தினசரி இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்'' என்றார் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக