புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளர், உருப்பர் போன்ற சில சாதிகளை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்க்க வேண்டும், அருந்த தியருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்ய வேண்டும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6-ந்தேதி சென்னை மெமோரியல் ஹால் அருகே எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்குகிறது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலித் தலைவர் களை இருக்கையில் அமர வைக்க மறுக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அணுமின் நிலையத்தை விட அனல் மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று போராட்டம் நடத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக