எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 11 நவம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு கண்டித்துபுதிய தமிழகம் மும்முனை போராட்டம்

தென்காசி:பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கூறினார்.இதுபற்றி அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகளை கண்டித்தும், பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இது தொடர்பாக பலியான ஆறு பேர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரியும் புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படுகிறது.இதன் முதல் கட்டமாக வரும் டிச.6ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் எனது தலைமையில் நடக்கிறது. மும்முனை போராட்டம் குறித்து மாவட்டந்தோறும் விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தென்காசியில் ரயில்வே மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்படாவிட்டால் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இஇவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.தென்காசி விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் புதிய தமிழம் சார்பில் நடந்த மும்முனை போராட்ட விளக்க கூட்டத்தில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரன், துணை செயலாளர் இசக்கி, அரவிந்த்ராஜா, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக