மதுரை, நவ. 19-
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசு பால், பஸ் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. பால் விலை 1 லிட்டருக்கு 6.25 காசு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது வரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட வில்லை.
பஸ் கட்டணங்கள் 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. உதாரணமாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு ரூ.12 கட்டணம் இருந்தது. தற்போது ரூ.21 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. அரசின் அவலத்தை போக்க தான், மக்கள் அ.தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. இந்த விலை உயர்வால் தமிழகத்தில் மந்த நிலை ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக