எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 25 நவம்பர், 2011

சென்னையில் 6-ந்தேதி டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்


வீர தேவேந்திரர்களுக்கு வணக்கம் நம் சொந்தங்கள் எல்லாம் நிச்சயம் டிசம்பர் 6 இல் சென்னையில் ஒன்று கூடுவோம் தேவேந்திர குல வேளாளர் எனும் எங்கள் அடையாளத்தை ஆதிதிராவிடர் என்று அழைக்காமல் தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்க என்று தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் வீர தேவேந்திர இனமே ஒன்றாய் திரண்டு வாரீர் வாரீர் என்று தமிழின போராளி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் அழைக்கிறார்

செவ்வாய், 22 நவம்பர், 2011

சென்னையில் 6-ந்தேதி டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்


   
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
பள்ளர், உருப்பர் போன்ற சில சாதிகளை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்க்க வேண்டும், அருந்த தியருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்ய வேண்டும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6-ந்தேதி சென்னை மெமோரியல் ஹால் அருகே எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
 
காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்குகிறது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலித் தலைவர் களை இருக்கையில் அமர வைக்க மறுக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அணுமின் நிலையத்தை விட அனல் மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
 
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று போராட்டம் நடத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 19 நவம்பர், 2011

பால், பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

கோவை : ""பால்விலை, போக்குவரத்து கட்டணம் உயர்வை திரும்ப பெறக்கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் நாளை (21ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கும்'' என,புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார். அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டிக்கிறோம்; இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மாநில அரசு தலா ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஆதி திராவிட நலத்துறைக்கு "பட்டியல் இனத்துறை' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இம்மானுவேல் சேகரன் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னை மெமோரியல் ஹாலில் ஒருநாள் உண்ணாவிரதம் வரும் டிச.,6 ல் நடக்கிறது.
அதிமுக அரசு பால் மற்றும் பஸ் கட்டணத்தை நூறு சதவீதம் உயர்த்தி, தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. விலையேற்றத்துக்கு, அரசு என்ன காரணம் கூறினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை."பால்விலை, போக்குவரத்து கட்டணம் உயர்வை திரும்பபெறக்கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன், நாளை ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறினார்

மாவீரர் தினத்தில் தனி ஈழம் அமைவதற்கு சூளுரை: டாக்டர் கிருஷ்ணசாமி

இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் தினத்தை நாளை புதிய தமிழகம் கட்சி மாவீரன் பிரபாகரன் தினமாக அனுசரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

kirushnasamyஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் இனத்திற்கென்று ஒரு தனிநாடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வந்த ஈழத் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.
அந்த தியாகிகளை போற்றும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதியை மாவீரர் தினமாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறிவித்து அனுசரித்து வந்தார்.
தமிழினத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்கிற பிரபாகரனின் லட்சியம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் நிச்சயம் அந்த லட்சியம் நிறைவேறும். அதற்காக உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
நவம்பர் 27ஆம் தேதி பிரபாகரன் மக்களிடையே தோன்றி உரையாற்றுவார் என்று சில தகவல்கள் வருகின்றன. ஆனால் அது குறித்த உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஆனாலும் மாவீரர் தினத்தை புதிய தமிழகம் கட்சி பிரபாகரன் தினமாக அனுசரித்து தனி தமிழீழத்தை பெறுவதற்கான சூளுரை ஏற்க முடிவு செய்துள்ளது.
இதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், ஒன்றியங்கள் மற்றும் கிராமப்பகுதிகளிலும் கூட பிரபாரகனின் படத்தை வைத்து இந்த மாவீரர் தினத்தை அனுசரிக்க வேண்டும். இதில் தமிழகத்தின் மக்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்றார்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்; மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

பஸ் கட்டண உயர்வை கண்டித்து 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்; 
 
 மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
மதுரை, நவ. 19-
 
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசு பால், பஸ் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. பால் விலை 1 லிட்டருக்கு 6.25 காசு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது வரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட வில்லை.
 
பஸ் கட்டணங்கள் 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. உதாரணமாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு ரூ.12 கட்டணம் இருந்தது. தற்போது ரூ.21 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. அரசின் அவலத்தை போக்க தான், மக்கள் அ.தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. இந்த விலை உயர்வால் தமிழகத்தில் மந்த நிலை ஏற்படும்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

அதிமுக அமைத்த கூட்டணி இருக்கிறதா? இல்லையா?- ஜெவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

திருச்சி: அதிமுக அமைத்த கூட்டணி இப்போதும் இருக்கிறதா, இல்லையா என்பதை முதல்வர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான குழு அமைப்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

மக்கள் நல பணியாளர்களை நியமித்தது திமுக அரசு. அவர்களை தூக்கியது அதிமுக அரசு. இந்த விஷயசத்தில் திமுக அரசும் தவறு செய்துவிட்டது. கடந்த ஆட்சியிலேயே அவர்களை நிரந்தரம் செய்திருக்கலாம்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் புதிய தமிழகம் நிச்சயமாக போட்டியிடும்.

பரமக்குடி கலவரத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும் ஆதிதிராவிட நலத்துறை என்பதை பட்டியல் துறையினர் என்று மாற்றக் கோரியும் டிசம்பர் 6ம் தேதி சென்னை மெமோரியல் ஹாலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம் என்றார்.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி நீடிக்கிறதா என்று கேட்டதற்கு, உள்ளாட்சி தேர்தலிலேயே அதிமுகவிலிருந்து வெளியேறிவிட்டோம். ஆனால், அதிமுக அமைத்த கூட்டணி இப்போதும் இருக்கிறதா, இல்லையா என்பதை முதல்வர் ஜெயலலிதா தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

வெள்ளி, 11 நவம்பர், 2011

தென்காசி மேம்பால பணி முடியாவிட்டால் புதிய தமிழகம் ரயில் மறியல் போராட்டம்

தென்காசி:"தென்காசியில் ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்காவிட்டால் புதிய தமிழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என அக்கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கூறினார்.புதிய தமிழகம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி நேற்று இரவு தென்காசி ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்டார். ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே மேம்பாலம் அமைக்கும் பணியை தென்னக ரயில்வே துவக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து கிருஷ்ணசாமியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறும் போது, ""தென்காசியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலத்தை கட்டி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பணி துவங்கியது. கடந்த 6 மாத காலமாக ரயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் தென் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுப்பதில் காலதாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. இன்னும் இரண்டு வாரங்களில் மேம்பால பணி துவக்கப்படாவிட்டால் புதிய தமிழகம் சார்பில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி தென்காசியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.சென்னையில் இருந்து தென்காசிக்கு முன்பு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை தினசரி இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்'' என்றார் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி.

பரமக்குடி துப்பாக்கி சூடு கண்டித்துபுதிய தமிழகம் மும்முனை போராட்டம்

தென்காசி:பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கூறினார்.இதுபற்றி அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகளை கண்டித்தும், பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இது தொடர்பாக பலியான ஆறு பேர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரியும் புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படுகிறது.இதன் முதல் கட்டமாக வரும் டிச.6ம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் எனது தலைமையில் நடக்கிறது. மும்முனை போராட்டம் குறித்து மாவட்டந்தோறும் விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தென்காசியில் ரயில்வே மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்படாவிட்டால் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இஇவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.தென்காசி விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் புதிய தமிழம் சார்பில் நடந்த மும்முனை போராட்ட விளக்க கூட்டத்தில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரன், துணை செயலாளர் இசக்கி, அரவிந்த்ராஜா, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 7 நவம்பர், 2011

டிசம்பர் 6- சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி




மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் விற்பனை மையங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சட்டப்படியாக 22.5சதவீதம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.

 ஆனால் 2008 முதல் 2011 முடிய உள்ள காலங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் 5,000 ‘விற்பனை’ மையங்களை புதியதாக தொடங்கியிருக்கிறது.  இதில் 22.5 சதவிகிதமான 1,200 விற்பனை மையங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், 7 நபர்களுக்கு மட்டுமே இக்குறிப்பிட்ட விற்பனை மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இதுகுறித்து முறையான விசாரணை செய்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம்  வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகின்றது.

மேலும் பரமக்குடியில் செப்டம்பர் 11இல் இமானுவேல் சேகரனின் நினைவுநாளன்று காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும்உயிரிழந்த பேர் குடும்பங்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையான ரூ.லட்சமும்,அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசுத் துறையில் வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  எனினும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

மேலும்தமிழ்நாட்டில் ‘77 ஜாதிகள் அடங்கிய பட்டியல் இன மக்களை ஆதிதிராவிடர்என அறிவிப்பது சரியானது அல்ல.  இதை மாற்றும் அதிகாரம் மத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு (national shedulde  caste commission ) மட்டுமே உண்டு. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள உள் ஒதுக்கீட்டை மாற்றும் அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற் குத்தான் (national shedulde  caste commission )உள்ளது.  எந்தவொரு மாநில அரசுக்கும் இந்த அதிகாரம் கிடையாது.  

அப்படி இருக்கையில் கடந்த ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்தது முற்றிலும் தவறு.  தற்போதுள்ள அரசு தாழ்த்தப்பட்டோருக்கு உண்டான உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும்.  

மேலும், 1957ஆம் ஆண்டு சமூக நீதிக்காக போராடி உயிரிழந்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை அரசுவிழாக்களாக அறிவிக்க வேண்டும். 

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியயுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாகவரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தன்று,சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி மேற்கொண்டுள்ள மும்முனைப் போராட்டம் குறித்துகீழ்கண்ட தேதிகளில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளுடைய ஆலோசனைக் கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்துவருகிற 10ஆம் தேதி துவங்கி 14ஆம் தேதி வரை 10 மாவட்டங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்யவிருக்கிறேன்.
டிசம்பர் 10 காலை தூத்துக்குடிமாலை விருதுநகர்
11 காலை தென்காசிமாலை நெல்லை
12 காலை தேனிமாலைதிண்டுக்கல் மற்றும் மதுரை
13 காலை ராமநாதபுரம் மாலை திருமயம்
14 காலை திருச்சி.

பிற மாவட்டங்களில் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் பின்னர் அறிவிக்கப்படும்.சென்னையில் டிசம்பர் அன்று எனது தலைமையில் நடைபெற உள்ள உண்ணாவிரத்தில்தமிழகமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது கண்டிக்கத்தக்கது:டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி



தற்போதைய செய்தி
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கைவிடுவது நல்லதல்ல. நூலகத்தை மருத்துவமனையாக்குவது என்பது தவறான அணுகுமுறை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நூலகத்தை மருத்துவமனையாக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகதத் திட்டம்.
5 ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் செயலுக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இது எந்த வகையிலும் ஏற்புடையது ஆகாது என்றார்