இமானுவல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தடையை மீறி அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் இன்று இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமியும் அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிறார்.
தடை உத்தரவு இருக்கும் நிலையில் இவர்கள் அஞ்சலி செலுத்த செல்வதால் பரமக்குடியில் பதட்டம் நீடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக