வெள்ளி, 30 செப்டம்பர், 2011
உள்ளாட்சி தேர்தல்: 6-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம்; டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இது தவிர 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் 200 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் 800 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உள்பட 2 ஆயிரம் பதவிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்க வில்லை. சட்டசபை தேர்தலில் 10 கட்சிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க. உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அதிருப்தி அ.தி.மு.க. வுக்கு எதிராக அமையும். தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற அ.தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது. அக்டோபர் 6-ந்தேதி முதல் புதிய தமிழகம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். தென் மாவட்டங்களில் அதிக இடங்களை புதிய தமிழகம் கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக