வெள்ளி, 23 செப்டம்பர், 2011
உள்ளாட்சி தேர்தல் என்பது அரசியல் சீர்குலைப்பாகும்: நெல்லையில் டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று காலை நெல்லைக்கு வந்தார். அப்போது, ஹாரியாஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்ட விரோதமானது. போலீஸ் முதலில் தடியடி, பின்பு கண்ணீர் புகை அதன் பின்னர் தான் துப்பாக்கி சூடு நடத்தும். ஆனால், எடுத்தவுடனேயே போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தியது காவல்துறை ரவுடிசமாகிவிட்டதாக தெரிகிறது.
துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக அமைக்கப்பட்ட ஒருநபர் நீதிபதி சம்பத் கமிஷன் தேவையற்றது. தற்போது பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் குழுவைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் கொடுப்பதோடு, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.
இமானுவேல் சேகரன் குருபூஜை தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது அரசியல் சீர்குலைவை காட்டுகிறது. முதல் நாள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மறு நாள் வேட்பு மனு தாக்கல் அறிவிப்பது மூடு மந்திரம் போல் உள்ளது. புதிய தமிழகம் தென் மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கிகள் கொண்ட அமைப்பு. கூட்டணி கட்சி என்கிற வகையில், எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதி எதிரொலிக்கும். வரும் 25ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி நிர்வாக்களுடன் ஆலோசித்து உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக