எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ஜெயலலிதாவை மிரட்டும் ‘ஏதோ ஒரு விஷயம்’ யாருக்கு தெரியும்? டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை, இந்தியா: “தி.மு.க.வுக்கு மறுபடியும் வாழ்வு கொடுக்க ஜெயலலிதா மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்று சந்தேகமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. “இதற்காக ‘எங்கோ ஒரு இடத்தில்’ சமரசம் செய்யப்பட்டுள்ளது போலவும் தெரிகின்றது” என அடுத்த அஸ்திரத்தையும் வீசுகின்றார் அவர்.

“கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே அ.தி.மு.க. முழுமூச்சாக நின்றது. தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற அதே நோக்கத்துடனே, நாமும் அவர்களுடன் (அ.தி.மு.க.வுடன்) கூட்டணி அமைத்துக் கொண்டோம். தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.

இன்று கூட்டணியில் காங்கிரஸ் துணைகூட இல்லாமல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு நிற்கிறது. தி.மு.க.வை இனி எழ முடியாதபடி முற்றாக வீழ்த்துவதற்கு இதை விட சரியான தருணம் கிடைக்கவே கிடைக்காது. சட்ட மன்றத் தேர்தலில் அ.தி.மு.க. யாருடைய உதவியை நாடியதோ, அதே கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் உள்ளாட்சித் தேர்தல்களையும் சந்தித்திருந்தால், எந்த இடத்திலும் தி.மு.க. டெபாசிட் வாங்கக்கூட முடியாது.

ஆனால், ஜெயலலிதா அப்படிச் செய்யவில்லை. தனது கூட்டணியிலுள்ள கட்சிகளை வெளியே அனுப்பி, கூட்டணியைப் பலவீனம் ஆக்கியிருக்கிறார். தன் இமாலயத் தவறுகளால் தி.மு.க-வுக்கு மறுபடியும் வாழ்வு கொடுக்கிறார்.

இவர் தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது. ஏதோ ஒரு விஷயம் அவரை மிரட்டுகிறது. எதற்காகவோ ஜெயலலிதா பின்வாங்குகிறார். ‘ஏதோ ஒன்று’ நடைபெற்றுவிடும் என்று அச்சப்படுகிறார் என்றுகூட நினைக்கிறேன்” என்றும் கூறுகிறார், டாக்டர் கிருஷ்ணசாமி.

இவரது கடந்தகாலம், மற்றும் இவரது கட்சியின் பழைய செயற்பாடுகள் எல்லாவற்றையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டும், அ.தி.மு.க.வின் செயற்பாடுகளை விமர்சித்த ஒரேயொரு நபர் இவர்தான்.

உள்ளாட்சித் தேர்தலில் சீட்களைப் பெறுவதற்காக, விஜயகாந்தின் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் உட்பட, கூட்டணிக் கட்சிகள் அசட்டுச் சிரிப்புடன் அடக்கி வாசித்து கொண்டிருந்தபோது, ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மூவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சட்டசபையில் முதலில் குரல் கொடுத்தவரும் இவர்தான். பரமக்குடி கலவரம் பற்றி ஆளும் கட்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த ஒரேயொரு கூட்டணிக் கட்சித் தலைவரும் இவர்தான்.

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தபோது, அதில் முதலில் இணைந்து கொண்டதே இவரது புதிய தமிழகம் கட்சிதான்.

ஜெயித்து சட்டமன்றம் சென்றபின், ராஜிவ் கொலை வழக்கு, பரமக்குடி கலவரம் ஆகியவற்றை சட்டமன்றத்தில் கிளப்பியதன் மூலம், முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்தை முதலில் சம்பாதித்த கூட்டணிக் கட்சித் தலைவரும் இவர்தான்!

வெற்றி பெறலாம் என்ற அ.தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது: டாக்டர் கிருஷ்ணசாமி


தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற அ.தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இது தவிர 20 க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் 200 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் 800 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உள்பட 2 ஆயிரம் பதவிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்க வில்லை. சட்டசபை தேர்தலில் 10 கட்சிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க. உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிருப்தி அ.தி.மு.க. வுக்கு எதிராக அமையும். தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற அ.தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது. அக்டோபர் 6 ந்தேதி முதல் புதிய தமிழகம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். தென் மாவட்டங்களில் அதிக இடங்களை புதிய தமிழகம் கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்

உள்ளாட்சி தேர்தல்: 6-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம்; டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இது தவிர 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் 200 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் 800 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உள்பட 2 ஆயிரம் பதவிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்க வில்லை. சட்டசபை தேர்தலில் 10 கட்சிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க. உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிருப்தி அ.தி.மு.க. வுக்கு எதிராக அமையும். தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற அ.தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது. அக்டோபர் 6-ந்தேதி முதல் புதிய தமிழகம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். தென் மாவட்டங்களில் அதிக இடங்களை புதிய தமிழகம் கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்: அதிமுக மீது டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு


மதுரைசில் (24.09.2011) செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனியாக போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தென்மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனியாக போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தென்மாவட்டங்களி

புதிய தமிழகம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவி, கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறது, கூட்டணி கிடையாது என்று எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்போம். ஆனால் கடைசி வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. பரமக்குடி சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, அனைத்து சமூகத்தினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் முதுகுளத்தூரில் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இமானுவேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9ந் தேதி, பரமக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ல் அதிக கவனம் செலுத்துவோம்.

புதிய தமிழகம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவி, கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

மதுரைசில் (24.09.2011) செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,

அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறது, கூட்டணி கிடையாது என்று எங்களிடம் ஏற்க


நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனியாக போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தென்மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.


புதிய தமிழகம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவி, கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.


அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறது, கூட்டணி கிடையாது என்று எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்போம். ஆனால் கடைசி வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்.


பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. பரமக்குடி சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, அனைத்து சமூகத்தினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் முதுகுளத்தூரில் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


இமானுவேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9ந் தேதி, பரமக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

னவே கூறியிருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்போம். ஆனால் கடைசி வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. பரமக்குடி சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, அனைத்து சமூகத்தினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் முதுகுளத்தூரில் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இமானுவேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9ந் தேதி, பரமக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 24 செப்டம்பர், 2011

புதிய தமிழகம் தனித்துப் போட்டி: டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

மதுரை, செப்.24: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பரமக்குடி கலவர சம்பவத்துக்கு முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவே பொறுப்பு என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

பரமக்குடி சம்பவத்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிக்கு காரணமான கூட்டணியினரை கழற்றிவிட்டது தவறான முன் உதாரணம். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளா

ஜெ. அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

பரமக்குடி கலவர சம்பவத்துக்கு முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவே பொறுப்பு என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

பரமக்குடி சம்பவத்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிக்கு காரணமான கூட்டணியினரை கழற்றிவிட்டது தவறான முன் உதாரணம். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

உள்ளாட்சி தேர்தல் என்பது அரசியல் சீர்குலைப்பாகும்: நெல்லையில் டாக்டர் கிருஷ்ணசாமி















புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று காலை நெல்லைக்கு வந்தார். அப்போது, ஹாரியாஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,




பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்ட விரோதமானது. போலீஸ் முதலில் தடியடி, பின்பு கண்ணீர் புகை அதன் பின்னர் தான் துப்பாக்கி சூடு நடத்தும். ஆனால், எடுத்தவுடனேயே போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தியது காவல்துறை ரவுடிசமாகிவிட்டதாக தெரிகிறது.


துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக அமைக்கப்பட்ட ஒருநபர் நீதிபதி சம்பத் கமிஷன் தேவையற்றது. தற்போது பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் குழுவைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் கொடுப்பதோடு, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.



இமானுவேல் சேகரன் குருபூஜை தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும்.



தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது அரசியல் சீர்குலைவை காட்டுகிறது. முதல் நாள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மறு நாள் வேட்பு மனு தாக்கல் அறிவிப்பது மூடு மந்திரம் போல் உள்ளது. புதிய தமிழகம் தென் மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கிகள் கொண்ட அமைப்பு. கூட்டணி கட்சி என்கிற வகையில், எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதி எதிரொலிக்கும். வரும் 25ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி நிர்வாக்களுடன் ஆலோசித்து உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றார்

முதுகுளத்தூரில் 3 நாள் உண்ணாவிரதம் : டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

ராமநாதபுரம், செப்.22 (டிஎன்எஸ்) சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, முதுகுளத்தூரில் 3 நாள் உண்ணா விரதம் இருக்கப்போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி எம்.எல்.ஏ. ராமநாதபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பரமக்குடியில் கடந்த 11-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேவையற்றது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கான சட்ட விதிமுறைகள் எதையும் போலீசார் கையாளவில்லை. கொடிய குற்றங்களை புரிந்தவர்களுக்கு கோர்ட்டு மூலம் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று போராடி வரும் இந்த காலக்கட்டத்தில் பரமக்குடியில் 100 பேர், 200 பேர் கொண்ட கும்பல் மறியலில் ஈடுபட்டதற்காக துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர் உயிரை பறித்துள்ளனர். இதற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்திப்மிட்டல், துணை கமிஷனர் செந்தில்வேலன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

பரமக்குடி கலவரம் தொடர்பாக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் தலைமையிலான விசாரணை உண்மையை வெளி கொண்டுவர உதவாது. எனவே 2 அமர்வு நீதிபதிகளை கொண்ட குழுவை அமைத்து பரமக்குடி கலவரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். சமூக ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் லாபம்தேட சிலர் முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு யாரும் துணை போகக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். தனித்து போட்டியிடுவதா? கூட்டணியா? என்பதை பின்னர் அறிவிப்போம்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நான் 3 நாள் உண்ணாவிரதம் இருக்ப்போகிறேன். உண்ணாவிரதம் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார். (டிஎன்எஸ்)

வியாழன், 22 செப்டம்பர், 2011

பரமக்குடியில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாள் உண்ணாவிரதம்: டாக்டர் கிருஷ்ணசாமி

ராமநாதபுரம், செப்.22: பரமக்குடியில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகத்தில் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி பிரச்னையைப் பெரிதாக்கி சிலர் அரசியல் லாபம் பார்க்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதை சரி செய்ய வேண்டும். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைதி நிலவ, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்தார்.

சனி, 17 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரம்: டில்லி குழு ஆய்வு

பரமக்குடி கலவரம்: டில்லி குழு ஆய்வு
பரமக்குடி:டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய உறுப்பினர் லதா தலைமையிலான குழு, பரமக்குடியில் நடந்த கலவர பகுதிகள் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டது.பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராம்பிரபு, ஆர்.டி.ஓ., மீராபரமேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். இக் குழு மாலையில் ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் மற்றும் உயர்அதிகாரிகளை சந்தித்து கலவர விபரம் அறிந்தனர்

வியாழன், 15 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவர காட்சிகள்









ராம்விலாஸ் பஸ்வான்-டாக்டர் கிருஷ்ணசாமி : பரமக்குடியில் பதட்டம் நீடிப்பு

இமானுவல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.



தடையை மீறி அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியானார்கள்.



இந்நிலையில் இன்று இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளார்.



புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமியும் அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிறார்.



தடை உத்தரவு இருக்கும் நிலையில் இவர்கள் அஞ்சலி செலுத்த செல்வதால் பரமக்குடியில் பதட்டம் நீடிக்கிறது.

சட்டசபையில் பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம்

செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி):-பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு ஒரு துர்பாக்கியமான சம்பவம். புரட்சித்தலைவி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தற்போது நடந்துள்ள சம்பவம் கவலை அளிக்கிறது, வேதனை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் தற்போது ரூ.1 லட்சம் அறிவித்துள்ளார். அதை ரூ.3 முதல் 5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

இந்த துப்பாக்கி சூடு நடந்தது குறித்து நீதி விசாரணை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):-சமூக நீதிக்கு போராடி உயிர்நீத்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அமைச்சர் உதயகுமார், தமிழக அரசு டெல்லி பிரதிநிதி அசோகன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். இதுபோல் ஏராளமானோர் அங்கு சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

முதலில் வெறும் 50 பேர்தான் நின்றுள்ளனர். வருபவர்களை உடனுக்குடன் போலீசார் அப்புறப்படுத்தாததால் கூட்டம் அதிகரித்துள்ளது.பிரச்சினை ஏற்பட்ட பிறகு போலீசார் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இளையான்குடி, மதுரை, பரமகுடி ஆகிய 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இது ஒரு இனக்கலவரம் அல்ல. சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை விடுத்து சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணமான காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். எப்போதும் இதுபோன்ற துப்பாக்கி சூட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்கவேண்டும். இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசே நடத்த வேண் டும்.

கணேஷ்குமார் (பா.ம.க.):-

நடந்த சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். போலீசார் இந்த விஷயத்தில் நிதானமாக நடந்து கொள்ளாமல் துப்பாக்கி சூடு நடத்தியது சரி அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவேண்டும். இந்த சம்பவத்தின் உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

குணசேகரன் (இந்திய கம்யூ.):-நேற்று பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிர் இழந்த சம்பவத்துக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பலர் காயம் அடைந்துள்ளனர். இதே சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் முன்பு பேசும் போது, போலீசாருக்கு சுதந்திரம் வேண்டும் என்றார். ஆனால் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் இப்படி நடந்து கொண்டது சுதந்திரமில்லை. ஒரு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது ஜான்பாண்டியனை கைது செய்தது போலீசாரின் புத்திசாலிதனமான நடவடிக்கை இல்லை.அதனால் தான் இந்த பிரச்சினை ஏற் பட்டுள்ளது.

இதுபற்றி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே கொடுத்த நிதி போதாது. ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். குரு பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் போலீசார் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் நடந்து கொள்ளாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சவுந்தர்ராஜன் (மார்க் சிஸ்டு கம்யூ.):ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதால் தான் பதட்டம் ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். போலீசார் அவசரப்படாமல் முதிர்ச்சியுடன் நடந்திருக்கவேண்டும்.

ஜான்பாண்டியன் இறந்த மாணவன் வீட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரை அந்த வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று இருக்கலாம். அதை விட்டு விட்டு கைது செய்தது தவறு. இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உண்மையில் இது சாதிக் கலவரம் அல்ல. இதை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கவேண்டும். காவல் துறையினருக்கு சுதந்திரம் வேண்டும் என்பதை இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இதுபற்றி நீதி விசா ரணை நடத்தவேண்டும். பலியானவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

பரமக்குடி தூப்பாக்கி சூட்டில் இறந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க வேண்டும் : டாக்டர் க.கிருஷ்ணசாமி

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த சிகிச்சையில் இருக்கும் பரமசிவம், சிவா, செந்தில்முருகன், சதுரகிரி, யேசு, லோகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,பரமக்குடியில் நடந்த சம்பவம் சிலர் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளது. இது குறித்து நான் சட்டசபையில் பேசுவேன்.

காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

Krishnasamy dubs Chief Minister's statement on firing ‘police report'

Krishnasamy dubs Chief Minister's statement on firing ‘police report'


The Chief Minister's statement in the Assembly on the Paramakudi firing incident is condemnable as it was nothing but a police report in which there was not a single word of sympathy for the loss of life of six Dalits, said K. Krishnasamy, president, Puthiya Tamilagam, on Tuesday.

Addressing a press conference here, Dr. Krishnasamy said that for long there was an anti-Dalit psyche prevailing among the police. It had now reached a crescendo.

The police report had given a communal/caste colour to the incident by referring to a wall writing, but that was not the case. It was an attempt to divert the human rights violation by the police. “We demand that the remarks referring to the wall graffiti should be expunged from the Assembly records.”

The Chief Minister was misled by some police officers, he said.It was not even four months since the new government assumed office and the lives of six Dalits were lost in police firing. If this trend continued, it would lead to a precarious situation.

He demanded the immediate suspension of police officials involved in the shootout and in line with the Scheduled Caste and Scheduled Tribe Prevention of Atrocities Act 1989 and Rules 1995, Rs.5 lakh should be given as compensation for the families of the victims along with a government job.

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இன்றும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு



தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு சாபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் தொடங்கியது.கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் எழுந்து பரமகுடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கோரினார் ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

பேச அனுமதி தரும்படி நீண்ட நேரம் வலியுறுத்திக் கொண்டிருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தன் கோரிக்கையை திட்டவட்டமாக சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.சட்ட பேரவை வாசலில் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர் அப்போது அவர் கூரியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் மட்டுமே சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த முடியும் என்பதற்காகவே அவரது அணியில் கூட்டணி கட்சியாக இடம் பெற்றோம். நேற்று சட்டமன்ரத்தில் பேசும்பொது கூட இந்த கருத்தை பதிவு செய்தேன்.

தமிழ்நாட்டில் இனக் கலவரம் இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கம் கொண்டவன் நான். எனவே தான் பரமக்குடியில் நடைபெற்றது இனக் கலவரம் அல்ல என்று பேசினேன். அங்கு நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால அந்த மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தற்காலிக பணி நீககம் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. சட்டமன்றத்தில் இந்த கருத்தைப் பேசுவதற்காக எழுந்தேன் அதே சமயம் முதலமைச்சர் நேற்று பேசும்போது பிரச்சினையின் காரணத்தை தெரிவித்து அவையில் பதிவு செய்திருக்கிறார்கள். அது உகந்த கருத்து அல்ல. அந்தக் கருத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்பினேன். ஆனால் என்னை பேச விடவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தேன் என கூறினார்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு





























பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து (12/09/2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்த பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி வழங்கவில்லை. இதனால் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளி நடப்பு செய்தார்.

பரமக்குடி தூப்பாக்கி சூட்டில் இறந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்க வேண்டும் : டாக்டர் க.கிருஷ்ணசாமி

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த சிகிச்சையில் இருக்கும் பரமசிவம், சிவா, செந்தில்முருகன், சதுரகிரி, யேசு, லோகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,பரமக்குடியில் நடந்த சம்பவம் சிலர் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளது. இது குறித்து நான் சட்டசபையில் பேசுவேன்.

காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

புதிய தமிழகம் வேண்டுகோள் செப்- 11 தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அனுசரிக்க வேண்டும்!

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து முதல் கள பலியானவர் தியாகி இம்மானுவேல் சேகரனார். இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி - செல்லூர் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தார். தனது இளமை பருவத்திலே இராணுவத்தில் சேர்ந்த அவர், இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவிய சமூக கொடுமைகளுக்கு எதிராக சனநாயக வழியில் போரடினார். அம்மாவீரன் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 - ஆம் நாள் படுகொலைக்கு ஆளானார். அவரது மரணம் குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் “ இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கின்றார். இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டுமல்ல உலகமே புகழும் வீரனாகவே அவரை கருத வேண்டும்.நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கி கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். இவ்ர் பெயர் இந்நாட்டுச் சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியதே” என் புகழாரம் சூட்டி உள்ளார்.

அவ் மகத்தான மாவீரனின் 54 – வது நினைவு நாளை அரசு விழாவாக அனுசரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல் அமைச்சரை புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பரமக்குடி கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்



சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் 30க்கும் மேற்பட்டோர், ''பரமக்குடி கலவரம் தமிழக அரசின் திட்டமிட்ட சதி'' என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் ஆர்ப்பாட்டத்தில், ''பாதிக்கப்பட்ட குடும்பங்களூக்கு இழப்பீட்டுத்தொகையாக 10 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.'' என்று கோஷம் எழுப்பினர்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

செங்கொடி உடலுக்கு நடிகர்கள் சத்தியராஜ், சேரன், டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி













ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார்.



தகவல் கிடைத்ததும் பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள், சினிமா உலக பிரமுகர்கள் ஏராளமானோர் காஞ்சீபுரத்திற்கு விரைந்து வந்து செங்கொடிக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



அவரது உடல் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்களம்பாடி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

செங்கொடியின் உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததால் உடல் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிவைக்க மக்கள் மன்றம் முடிவு செய்தது. அதன்படி நேற்று வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தது. 8 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



இதனை அடுத்து செங்கொடியின் உடல் அடக்கம் இன்று (31.08.2011) நடக்கிறது. இதில் பங்கேற்க கட்சி தலைவர்கள், தமிழர் அமைப்பு நிர்வாகிகள் காஞ்சீபுரத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.



செங்கொடியின் உடலுக்கு நடிகர் சத்தியராஜ், இயக்குநரும் நடிகருமான சேரன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தியாகச்சுடர் செங்கொடி