எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 20 ஜூலை, 2011

நிலத்தடி நீர் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் இயக்கம்: டாக்டர்.க.கிருஷ்ணசாமி


 "நிலத்தடி நீர் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்படும்,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., கூறினார்.அவர் கூறியதாவது: நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கான பேரணியில் உயிர் நீத்தவர்களுக்கு ஜூலை 23ல் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 137 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் மோசமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 85 சதவீதம் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்கும், 5 சதவீதம் தொழிற்சாலை, 10 சதவீதம் பிற பயன்பாட்டுக்கும் செலவழிக்கப்படுகிறது.

விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரில் 46 சதவீதம் மீண்டும் நிலத்திற்கு செல்கிறது. எனவே நிலத்தடி நீரை பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. நிலத்தடி நீர் பொறியியல் துறை இதுகுறித்து பல முறை எச்சரித்துள்ளது. நிலத்தடி நீர் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்படும். தொழிற்சாலை நிர்வாகங்கள், தங்கள் தேவைக்குரிய தண்ணீரை அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும். தொழில் மயம் என்ற பெயரில் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுக்க அனுமதித்தால் மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவர், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக