எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 19 ஜூலை, 2011

ஓட்டப்பிடாரம் தாசில்தார் இடமாற்றம் திடீர் ரத்து வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பு

 ஓட்டப்பிடாரம் தாசில்தார் மாற்றம் நிறுத்தப்பட்டு மீண்டும் அவரே பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ரெகுலர் தாசில்தாராக வருவதற்கு தாசில்தார் கருப்பசாமி முயற்சி செய்தார். சில அதிமுக விஐபிக்களும் அவருக்கு சிபாரிசு செய்யப்பட்டனர்.ஆனால் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் மீண்டும் பணியாற்ற வாய்ப்பளித்தால் பிரச்னை வரும் என்பதால் அவரை சாத்தான்குளம் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டு அவர் அங்கு பணி செய்து வருவதாக வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதே போல் தாசில்தார் மாற்றத்தில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் மணி மாற்றம் செய்யப்பட்டு அங்கு தாசில்தார் சுப்பையன் நியமிக்கப்பட்டார். மணி தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.இதற்கிடையில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி வருவாய்துறை அமைச்சரை சந்தித்து தாசில்தார் மணி அங்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தாசில்தாராக மணி இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு வருவாய்துறை மேலிடத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்ததாக தெரிகிறது.இதனை தொடர்ந்து மீண்டும் ஓட்டப்பிடாரம் ரெகுலர் தாசில்தாராக மணி தொடர அனுமதிக்கப்பட்டு ஆர்டர் போடப்பட்டதாக வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓட்டப்பிடாரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்ட சுப்பையன் தூத்துக்குடி சுனாமி திட்ட தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில் மாறுதல் செய்யப்பட்டு அதே இடத்தில் மீண்டும் பணி வழங்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக