எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 30 ஜூலை, 2011

ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - கிருஷ்ணசாமி!

"இலங்கை தமிழ் ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A., அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தின் ஜீவநதிகளாக இருந்த வைகை, பாலாறு, தென்பெண்ணை வறண்டு போனது. காவிரி, தாமிரபரணி போன்ற நதிகள் நீர் ஆதரமின்றி பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் நீர்நிலைகள் சுருங்கி வருகின்ற காரணத்தால் விவசாயம் குறைந்து வருகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
வட மாநிலங்களான உ.பி, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆவதும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் வடக்கிலிருந்து கங்கை காவிரியை இணைக்க பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால் சிறுசிறு நதிகளை இணைத்து கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
'தென்மாவட்டங்களின் நீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்கு காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, குண்டாறு மற்றும் வைகை ஆறுகளை இணைத்தும், வைப்பாறு மற்றும் மலட்டாறு போன்றவைகளை இணைப்பதன் மூலமும் தென் தமிழகம் நீர் ஆதரங்களில் மேம்பட்டு விவசாயிகள் பயன்பெறுவர்' என்பதை நேற்று தமிழக முதல்வரைச் சந்திக்கும் போது வலியுறுத்தினேன்.
நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாக உலக வெப்பமயமாதலால் நிலத்தடி நீர் வறண்டு போகின்றது. நிலங்கள் அனைத்தும் தொழிற்மயமாகின்ற காரணத்தால் அதிலிருந்து வெளிவரும் புகை, வாயு காரணமாக காற்று மாசுபடாமல் தடுக்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்டு 15ம் தேதி புதியதமிழகம் மற்றும் பிறந்தமண் அறக்கட்டளையின் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றிய அளவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்படும்.
இலங்கை இனப்பிரச்சனை என்பது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை ஆகும். அண்மையில் தெற்கு சூடான் இன அடிப்படையில் தனி நாடானது. இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது போல இலங்கை தமிழர் பிரச்சனையிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியாகும் சானல்4 தொலைக்காட்சி செய்தியை அடிப்படையாக வைத்து அமெரிக்கா இலங்கைமீது பொருளாதார தடை விதித்தது. அமெரிக்கா தனது தோழமை நாடுகளையும் இலங்கைமீது பொருளாதார தடை விதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக்கெடுப்புக்கு முன்பாக ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐநா மற்றும் உலக நாடுகளை அமெரிக்கா வலியுத்த வேண்டும்.
10,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்து நாடு இலங்கை தமிழர் பிரச்சனையில் இரக்கம் காட்டுகிறது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. ஆனால் இந்திய அரசு மட்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இலங்கை ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிப்பதும், தளவாடங்கள் கொடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல; இது கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.
2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களிடம் பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை இந்த அரசு மீட்டெடுப்பது பாராட்டுக்குறியது. எனினும் பன்னாட்டு நிறுவனங்களால் போலிப்பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. மேலமருதூர், சில்லாங்குளம், இளவேலங்கால், தருவைக்குளம் போன்ற ஊர்களில் போலிப்பத்திரம் மூலம் இந்து பாரத், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி நிறுவனங்களின் மூலம் விவசாய நிலங்கள் இந்து கோவில்கள், மயானங்கள், குளங்கள், நடைபாதைகள் போன்றவற்றை அபகரித்து வைத்துள்ளனர். இதைபற்றி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநிலஅமைப்புச்செயலாளர் வே.க.அய்யர், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ.ராமசாமி அவர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கிறிஸ்டோபர், மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம், ஆகியோர் உடனிருந்தனர்

நிலத்தடி நீரை பாதுகாக்க ஆகஸ்டு - 15 விழிப்புணர்வு சைக்கிள் பேரணி- டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அறிவிப்பு.

 

தமிழகத்தின் ஜீவநதிகளாக இருந்த வைகை, பாலாறு, தென்பென்னை வறண்டுபோனது காவிரி, தாமிரபரணி போன்ற நதிகள் நீர் ஆதரமின்றி பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் நீர்நிலைகள் சுருங்கி வருகின்ற காரணத்தால் விவசாயம் குறைந்து வருகின்றது அடுத்த பத்தாண்டுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது, வட மாநிலங்களான உ.பி, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆவதும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது இதை தவிர்க்கும் பொருட்டு கங்கை காவிரி இணைப்பு திட்ட்த்தை நிறைவேற்ற கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர், ஆனால் வடக்கிலிருந்து கங்கை காவிரியை இணைக்க பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால் சிறுசிறு நதிகளை இணைத்து கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. தென்மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு காவிரி, அக்னியாறு, தெற்குவெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, குண்டாறு மற்றும் வைகைஆறுகளை இணைத்தும், வைப்பாறு மற்றும் மலட்டாறு போன்றவைகளை இணைப்பதன்மூலமும் தென் தமிழகம் நீர் ஆதரங்களில் மேம்பட்டு விவசாயிகள் பயன்பெறுவர் என்பதை நேற்று தமிழக முதல்வரை சந்திக்கும் போது வலியுறுத்தினேன்.

நிலம், நீர், காற்று ஆகியவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இதன்காரணமாக உலகவெப்பமயமாதலால் நிலத்தடி நீர் வறண்டு போகின்றது நிலங்கள் அனைத்தும் தொழில் மயமாகின்ற காரணத்தால் அதிலிருந்து வெளிவரும் புகை, வாயு காரணமாக காற்று மாசுபடாமல் தடுக்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்டு 15ம் தேதி புதியதமிழகம் மற்றும் பிறந்தமண் அறக்கட்டளையின் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றிய அளவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நட்த்தப்படும்.

இலங்கை இனப்பிரச்சனை என்பது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை ஆகும். அண்மையில் தெற்கு சூடான் இன அடிப்படையில் தனி நாடானது இதற்காக பொதுவாக்கெடுப்பு நட்த்தப்பட்ட்து அது போல இலங்கை தமிழர் பிரச்சனையிலும் பொதுவாக்கெடுப்பு நட்த்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியாகும் சானல்4 தொலைக்காட்சி செய்தியை வைத்து அமெரிக்கா பொருளாதார தடை விதித்த்து. அமெரிக்கா தனது தோழமை நாடுகளையும் பொருளாதார தடை விதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக்கெடுப்பு முன்பாக ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐநா மற்றும் உலக நாடுகளை அமெரிக்கா வலியுத்த வேண்டும்.

10,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்து நாடு இலங்கை தமிழர் பிரச்சனையில் இரக்கம் காட்டுகிறது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது, ஆனால் இந்திய அரசு மட்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இலங்கை ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிப்பதும், தளவாடங்கள் கொடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல இது கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.
        
 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களிடம் பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை இந்த அரசு மீட்டெடுப்பது பாராட்டுக்குறியது எனினும் பண்ணாட்டுக் கம்பெனிகளால் போலிப்பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது மேலமருதூர், சில்லாங்குளம், இளவேலங்கால், தருவைக்குளம் போன்ற ஊர்களில் போலிப்பத்திரம் மூலம் இந்து பாரத், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி கம்பெனிகளின் மூலம் விவசாய நிலங்கள் இந்து கோவில்கள், மாயானங்கள், குளங்கள், நடைபாதைகள் போன்றவற்றை அபகரித்து வைத்துள்ளனர். இதைபற்றி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

செவ்வாய், 26 ஜூலை, 2011

மாஞ்சோலை தோட்ட தேயிலை நிலங்களை 5 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுக்க வேண்டும் : எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி

 


திருநெல்வேலி : மாஞ்சோலை தோட்ட தேயிலையின் நிலங்களை 5 ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என புதிய தமிழகம் நிறுவன தலைவர் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 1999ம் ஆண்டு 5 மாவட்ட தோட்ட தேயிலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம். அப்போது திமுக ஆட்சியின் அடக்கு முறையால் போலீசார் எங்கள் மீது லத்தியால் தாக்கினர்.

 
இதில் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் நினைவு தினத்தை ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். தாமிபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த ஆண்டாவது எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டது. எனவே அந்த நிலங்களை தலா 5 ஏக்கர் வீதம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்

டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்

திங்கள், 25 ஜூலை, 2011

நெல்லை தாமிரபரணி ஆற்றில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி!

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தாக்குதலுக்கு பயந்து ஆற்றுக்குள் குதித்ததில் 17 பேர் இறந்தனர்.

இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
 தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன்,  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, பாஜ உள்ளிட்ட பல்வேறு தாழ்த்தப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து, அஞ்சலி செலுத்தினர். மாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்துகிறார்.

ஒவ்வொரு கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும்  நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினார்.  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் பகல் 12 மணிக்கு வண்ணார்பேட்டையிலிருந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு அரசியல் கட்சியினர் ஒரே இடத்தில் குவிந்துள்ளதையடுத்து நெல்லையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மார்ஷ்டன்லியோ மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் லயோலா இக்னேஷியஸ், ஸ்டாலின், ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், ஆற்றுப்பாலம் மற்றும் ரயில்நிலையம், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிரடிப்படை மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தாமிரபரணியில் உயிர்நீத்த 17 பேருக்கு வீரவணக்க பேரணி ( படங்கள் )

 








மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு நாள்:நெல்லை ஆற்றில் கட்சிகள், இயக்கத்தினர் அஞ்சலி

திருநெல்வேலி:நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் 11ம்ஆண்டு நினைவுநாளையொட்டி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்ற போது கலவரம் ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தினர். 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 11ம்ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று 19 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள், சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.பின்னர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்டச்செயலாளர் சுப்பிரமணியன், மாநகர செயலாளர் செல்லப்பா, மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் அரவிந்தராஜா, அவைத்தலைவர் எட்வர்டுராஜ், இணைச்செயலாளர் சிவக்குமார், துணைச்செயலாளர் மணிகண்டன், தூத்துக்குடி மாநகர செயலாளர் கனகராஜ், விருதுநகர் மாவட்டச்செயலாளர் ராமராஜ் உள்ளிட்டோர் ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய கம்யூ.,:இந்திய கம்யூ., சார்பில் மாவட்டச்செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சத்யன், மாநகர செயலாளர் சுடலை, ஏஐடியுசி., மாவட்டத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பா.ம.க., சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் மாநில கொள்கை விளக்க அணித்தலைவர் வியனரசு, மாநகர் மாவட்டச்செயலாளர் சீயோன் தங்கராஜ், மாநகர அமைப்புச்செயலாளர் ரவிதேவேந்திரன், மாவட்ட பொருளாளர் பாப்பாரத்தினம், சேதுபதி, ரமேஷ்பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மா.லெ.கம்யூ., சார்பில் மாவட்டச்செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜமாணிக்கம், தேன்மொழி, கணேசன், கருப்பசாமி, ரவிடேனியல், மாரிமுத்து, மாரியப்பன், ஏஐசிசிடியு., நிர்வாகிகள் வெங்கட்ராமன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.,:பா.ஜ., சார்பில் எஸ்.சி., அணி மாநிலச்செயலாளர் முருகதாஸ் தலைமையில் மாவட்டத்தலைவர் முத்துபலவேசம், தச்சநல்லூர் மண்டல பொதுச்செயலாளர் வெங்கடேஷ், மாவட்டத்தலைவர் கட்டளை ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் மகா கண்ணன், குருசாமி, ஆவுடையப்பன், அருள்ராஜ், மாரியப்பன், முத்துக்குமார், பெருமாள், சரவணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிற்சங்கத்தலைவர் பிரபுகாளிதாஸ், மத்திய பொருளாளர் பாஸ்கர், மாநகரத்தலைவர் சந்தானக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சப்பாணியாதவ், மாவட்ட பொருளாளர் கென்னடி, மகளிரணி தலைவி ராணி ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திரிணாமூல் காங்., சார்பில் மாவட்ட விவசாய அணித்தலைவர் ஆறுமுகம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள்:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன் தலைமையில் நிர்வாகிகள் மோகன், கார்த்திக், கரிசல் சுரேஷ், ஜீவா, கிருபாகரன், அமுதா மதியழகன், நடராஜன், நல்லையா, துரையரசு, சுப்பிரமணியன், ஆசைத்தம்பி, முத்துக்கிருஷ்ணன், விநாயகம் செல்வம், மனோகர், அரவிந்த்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் தலைவர் துரையரசன், மாநில பொருளாளர் சங்கர், மாவட்டச்செயலாளர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் காந்திமதிநாதன், மகளிர் அணிச்செயலாளர் செல்லம்மாள், மாநில இளைஞரணி செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.புரட்சிபாரதம் சார்பில் தென் மண்டல செயலாளர் பெருமாவளவன், சாம்ராஜ், பலராமன், நாகராஜன், ஜான், மன்னார், வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் மாவட்டச்செயலாளர் சுப்பையா தலைமையில் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் இலக்கியக்கழகம் சார்பில் மாநில அமைப்புச்செயலாளர் செல்லையா பாண்டியன், துணைச்செயலாளர் சுபாஷ், மாவட்டச்செயலாளர் நாகராஜன், பாலா, சுதாகர், செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையில் மாநில நிதி செயலாளர் சங்கர், மாவட்டச்செயலாளர் கதிரவன், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் மனோகர், மாவட்டத்தலைவர் செங்குட்டுவன், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்மாறன், மாநகர தலைவர் தமிழ்வளவன், செயலாளர் இளமாறன், இளைஞரணி மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழ்ப்புலிகள் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் பேரறிவாளன், மாவட்டச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில மையக்குழு உறுப்பினர் நெல்லை மாயா, மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் தமிழரசு, மாவட்ட துணைச்செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழர் விடுதலைப்புலிகள் சார்பில் தலைவர் செந்தமிழன், பொதுச்செயலாளர் தமிழ் முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய குடியரசு கட்சி(அ) சார்பில் மாவட்டச்செயலாளர் பரமசிவன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மா.கம்யூ., சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்டச்செயலாளர் பழனி, மாநிலக்குழு உறுப்பினர் கருமலையான், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், ராஜாங்கம், பாஸ்கரன், மாநகர செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மத்திய, மாநில அரசு எஸ்.சி.எஸ்.டி., ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தலைவர் கணேசன், செயலாளர் சுவாமிநாதன், மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், மண்டல செயலாளர் முருகேசன் அஞ்சலி செலுத்தினர். மத்திய, மாநில அரசு எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் நலச்சங்கம் சார்பில் ஆலோசகர் பெரிசாமி, மாவட்டத்தலைவர் அரிராம், பொதுச்செயலாளர் அம்பேத்கர், மாவட்ட பொருளாளர் பொன்னுச்சாமி, துணைத்தலைவர்கள் செல்லையா, சுந்தரம், ரெங்கநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மொட்டை போட்டுமலர் அஞ்சலி:பலியானவர்களின் குடும்பத்தினர் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். களக்குடியை சேர்ந்த செல்வராஜ், புதிய தமிழகம் கட்சித்தொண்டர் அரிராம் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை முதல் மாலை வரை ஆற்றங்கரை, ஆற்றுப்பாலம், ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட், தலைவர்கள் சிலைகள், கட்சி அலுவலகங்கள் முன் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்

ஞாயிறு, 24 ஜூலை, 2011

மாஞ்சோலை தோட்ட தேயிலை நிலங்களை 5 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுக்க வேண்டும் : எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி

 


திருநெல்வேலி : மாஞ்சோலை தோட்ட தேயிலையின் நிலங்களை 5 ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என புதிய தமிழகம் நிறுவன தலைவர் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 1999ம் ஆண்டு 5 மாவட்ட தோட்ட தேயிலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம். அப்போது திமுக ஆட்சியின் அடக்கு முறையால் போலீசார் எங்கள் மீது லத்தியால் தாக்கினர்.

 
இதில் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் நினைவு தினத்தை ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். தாமிபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த ஆண்டாவது எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டது. எனவே அந்த நிலங்களை தலா 5 ஏக்கர் வீதம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

தாமிரபரணியில் உயிர்நீத்தோர் நினைவு தினம் : டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி

 




நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின்  நினைவு நாளையொட்டி புதிய தமிழகம் கட்சியினர் க்ட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்ற போது  போலீசார் தடியடி நடத்தினர். 

இதில் ஒரு சிறுவன் உட்பட 17 பேர் தாமிரபரணி ஆற்றில்  இறந்தனர்.இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதியை தாமிரபரணியில் உயிர் நீத்தோர் நினைவு தினமாக அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 

புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ  தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது. அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.பின்னர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.

PT demands action against land grabbing companie

 


While welcoming action being taken against land-grabbers across the State, Puthiya Thamizhagam president K. Krishnasamy has appealed to the Tamil Nadu Government to initiate stringent action against individuals and firms that were involved in the “social evil of land grabbing”.

Speaking to reporters here on Thursday, Dr. Krishnasamy said several thousands of acres of land, illegally grabbed by a multinational company in Ottapidaaram area through a middleman, had been stopped after the action against the land grabbers started in Tamil Nadu.

Moreover, electricity generation units coming up on the outskirts of Tuticorin had also purchased vast stretches of land through illegal means which also should be probed.

“Hence, the State Government, which is taking action against the politicians and other individuals based on the cases pertaining to land grabbing, should also take action against the companies that had bought several thousands of acres of land from the poor through coercive means and retrieve the lost properties back to the actual owners,” he noted.

The PT leader, while urging the government to ban the uncontrolled withdrawal of groundwater by the companies for commercial purposes, appealed to the Tamil Nadu Government to accord due importance to the rainwater harvesting also as being popularised during its previous tenure.
He criticised Union Minister for Chemicals and Fertilizers M.K. Alagiri for going to Palayamkottai Central Prison to visit his associates in the car carrying the national flag and red beacon.


COURTESY : THE HINDU,TIRUNELVELI

நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை : டாக்டர்.க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

 


திருநெல்வேலி : நில அபகரிப்பில் ஈடுபட்ட பன்னாட்டு கம்பெனிகள், வெளிமாநிலத்தவர்கள் என யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். என நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
                                                   
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி மலர் அஞ்சலியும், பேரணியும் நடத்தப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. புதிய தமிழகம் கட்சியை கிராமம், நகரங்களில் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் ஏழை மக்களின் நிலங்கள் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நில அபகரிப்பில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள், பன்னாட்டு கம்பெனிகளும் ஈடுபட்டுள்ளன. அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மலைப்பட்டி, இளவேளங்கால் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை விவசாய மக்களின் நிலங்கள் மும்பையை சேர்ந்த ஒரு தனியார் கம்பெனியால் மோசடி செய்து ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடியை சேர்ந்த அரசியல் பிரமுகர் துணை போயுள்ளார்.
மேலமருதூர், புதூர் பாண்டியாபுரம், சிலாத்திகுளம் பகுதிகளில் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏழை மக்களின் நிலங்களை போலியாக பதிவு செய்துள்ளன. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்களின் நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. ஓடைகள், குளங்கள், மயானங்கள், திருச்செந்தூர் மங்கம்மாள் ரோடு போன்ற இடங்கள், அரசு சொத்துக்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு பாரபட்சம் இல்லாமல் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் மீட்டு பாதுகாக்கவேண்டும். ஏழை மக்களின் நிலங்களை மீட்டு அவர்களுக்கே மீண்டும் வழங்கவேண்டும். காற்றாலை நிறுவனங்களுக்காகவும் ஏழை மக்களின் நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக அளவு நடந்துள்ளது. நில மோசடியில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தாமிரபரணி, வைகை, பாலாறு ஆற்றுப்படுகைகளில் அளவுக்கு அதிகமாக விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு கவனம் செலுத்தவேண்டும் தொழிற்சாலைகள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும்.
ஆறுகளில் கழிவுகள் கொட்டப்படுவது, சாக்கடை கலப்பதையும் தடுக்கவேண்டும். நிலத்தடி நீர் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு சம்பந்தமாக ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளேன். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் உயிர்பிக்கவேண்டும். தமிழகத்தில் ஏரிகள், குளங்களில், ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டும். குளங்களில் மழைநீர் சேமிக்கவேண்டும்.
சமச்சீர் கல்வி தேவை தான். சமமான வாய்ப்புள்ள கல்வியாக தற்போதைய சமச்சீர் கல்வி இல்லை. சமச்சீர் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்படவேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கூறினார்.

புதன், 20 ஜூலை, 2011

புதிய தமிழகம் நிழற்படங்கள்










Focus on water resources, says PT

 


 The birth and death anniversary of Dalit leader Immanuel Sekaran who fought for the emancipation of the oppressed and was eventually killed during the Mudukulathur riots should be observed as a Government function, demanded K. Krishnasamy, president, Puthiya Tamizhagam, and Member of the Legislative Assembly (MLA), Ottapidaram constituency in Tuticorin district.

Addressing a press conference here on Wednesday, Dr. Krishnasamy said that his party on July 23  would be paying homage to the victims of ‘Tamiraparani Tragedy' where 17 persons lost their lives following a brutal police attack on a procession taken out in support of a labour struggle. He also said that the party would be observing the death anniversary of Immanuel Sekaran on September 11, in a big way.

He further said that global warming has become a serious issue and is affecting the climate, resulting in drastic changes to the environment. Industrialisation has also led to changes like groundwater depletion, deforestation and these crucial things should be taken to public.
Out of the 385 blocks in the State, studies show that the groundwater level in 137 blocks has got depleted to dangerous levels.

During the recent past in Tamil Nadu, water resources were largely used for industrial purposes, 40 per cent of water used for agriculture gets resuscitated back, but in the case of industries, the water gets evaporated 100 per cent, he said.

In Tirupur because of the “lackadaisical approach” of the government, dyeing units mushroomed everywhere thus not only resulting in polluting the water resources but also depleting the groundwater, so the State should immediately focus on water resources and prevent industries and others from indiscriminate extraction of groundwater and inculcate the practice of using water judiciously. Groundwater Engineering Division has already warned that the depletion of groundwater could result in earthquake.

Rainfall is low in southern districts and that is one of the main reasons for the migration of people from south to Chennai and western parts of the State and “fortunately, we had better rainfall during the last two years and people came back to their villages to engage in agriculture but due to indiscriminate extraction of water, the agriculture has been affected,” he said.

The PT leader said that in the 12 blocks in his Ottapidaram constituency in Tuticorin, 9 blocks face the dangerous situation of groundwater depletion, he demanded that the groundwater should be used for agricultural and domestic purposes and for industries government should enforce regulations to use only desalinated seawater, the Tamil Nadu Groundwater (Development and Management) Act, 2003 should be implemented fully.

Dr. Krishnasamy will be organizing a people's movement consisting of civil society members, environmentalists and other like minded members to protect the water resources, especially the groundwater

நிலத்தடி நீர் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் இயக்கம்: டாக்டர்.க.கிருஷ்ணசாமி


 "நிலத்தடி நீர் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்படும்,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., கூறினார்.அவர் கூறியதாவது: நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கான பேரணியில் உயிர் நீத்தவர்களுக்கு ஜூலை 23ல் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 137 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் மோசமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 85 சதவீதம் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்கும், 5 சதவீதம் தொழிற்சாலை, 10 சதவீதம் பிற பயன்பாட்டுக்கும் செலவழிக்கப்படுகிறது.

விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரில் 46 சதவீதம் மீண்டும் நிலத்திற்கு செல்கிறது. எனவே நிலத்தடி நீரை பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. நிலத்தடி நீர் பொறியியல் துறை இதுகுறித்து பல முறை எச்சரித்துள்ளது. நிலத்தடி நீர் சுரண்டுவதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்படும். தொழிற்சாலை நிர்வாகங்கள், தங்கள் தேவைக்குரிய தண்ணீரை அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும். தொழில் மயம் என்ற பெயரில் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுக்க அனுமதித்தால் மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவர், என்றார்.

ஈழத் தமிழினத்தின் துயரமும் இந்திய ஊடகங்களின் இருட்டடிப்பும்..

 

இலங்கையில் ஈழத் தமிழினத்திற்கு எதிராக சிறிலங்கா இனவெறி அரசு தனது முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்திய இனப்படுகொலைப் போரில் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்தச் செய்திகளைக் கேட்டு உலகமே அலறித் துடித்தது, எதிர்க்குரல் கொடுத்தது. ஆனால் இந்திய அரசைப் போல் இந்திய ஊடங்கங்களும் மெளனம் காத்தன.
இந்தியாவின் தொலைக்காட்சிகள், குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் கொழும்புச் செய்தியாளர்கள் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் உதய நாணயக்கார என்ன சொல்கிறாரோ அதுதான் உண்மை, அதைத்தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல், அதையே செய்தியாக்கி இந்தியர்களுக்குத் தந்தன.
இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழர்களின் உறவுகள் இலங்கைத் தீவில் கொல்லப்பட்டது இந்தியத் தமிழர்களுக்கு மட்டும்தான் வலித்ததே தவிர, இதர இந்தியர்களுக்கு வலிக்கவில்லை.
விரல் விட்டு எண்ணத்தக்க அளவிற்குக் கூட இந்தியாவின் எந்த ஒரு ஊடகமும் - இணையத்திலிருந்து தொலைக்காட்சி, நாளிதழ்கள் வரை - அங்கே நடந்த இனப் படுகொலை குறித்துப் பேசவில்லை. சில மனிதாபிமானிகளோடு அத்துயரம் நின்றுவிட்டது.
பொதுவாக உலகெங்கிலும் வாழும் இதழாளர்கள் அனைவரும் - அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - உண்மையை வெளிக்கொணர்வதில் ஓரினமாக செயலாற்றி வந்துள்ளார்கள்.
ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டபோது இந்தியாவின் இதழினம் அந்த உண்மையை சற்றும் கண்டுகொள்ளவில்லை.
அது இந்திய அரசும், இலங்கை அரசும், அதோடு சேர்ந்த சில நாடுகளும் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்ட 'பயங்கவாதத்திற்கு எதிரான போர்' என்கிற சொற்றொடரில் மயங்கி வேடிக்கை பார்த்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஊடகங்களும், அமெரிக்க, அவுஸ்திரேலிய ஊடகங்களும் அலறின. இலங்கையில் கூட தமிழினத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து பல சிங்கள இதழாளர்கள் கொந்தளித்து எழுந்தனர்.
ஈழத் தமிழின இதழாளர்களான தாரகி என்கிற தர்மரத்தினம் சிவராம், ஐயாத்துரை நடேசன், சுடர் ஒளியின் சுப்பிரமணியன் சுகிர்தராசன், யாழ் தினக்குரலின் மரியதாஸ் மனோஜ்ராஜ் ஆகியோருடன் லசந்த விக்கிரமசிங்க, இக்னலிகொட வரை பல சிங்கள இதழாளர்கள் சிங்கள இராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்ட ஒட்டுக்குழுக்களாலும், கூலிப்படையினராலும் நேரடியாகவும் கடத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இக்னலிகொட தமிழினத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காகவே அவர் கடத்தப்பட்டார் என்று அவருடைய மனைவி கதறுகிறார். 500 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனர் என்று தெரியவில்லை.
எனவே ஈழத் தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறையையும், இனப் படுகொலைப் போரையும் இலங்கையின் இதழாளர்கள் பலரும் கண்டித்து எழுதி வந்தனர். இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டைத் தாண்டி ஒரிரு இதழாளர்கள் தவிர, வேறு எவரும் தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை, தொலைக்காட்சிகளில் காட்டவில்லை! இதனை இன்றைக்கு சொல்லக் காரணம் உள்ளது.
இதுநாள்வரை ஈழத்தில் நடந்த மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தமிழினத்தவரும், ஐரோப்பியர்களும் மட்டுமே உரக்கக் கூறிவந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவான அறிக்கை கொடுத்த பிறகும் இந்தியாவின் ஊடங்கள், ஊடகவியலாளர்களின் போக்கு மாறவில்லை!
ஊடகங்களை மத்திய காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்துகிறது, இந்தியாவின் முதன்மை ஊடகங்கள் அனைத்தும் பெரு நிறுவனங்களின் ஒரு கிளையாக இருக்கின்றன என்றெல்லாம் கூறப்படுவது பெருமளவிற்கு உண்மையே என்றாலும், ஊடகவியலாளர்கள் வெளியே வந்து தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அந்த அநீதியை கண்டிக்காதது ஏன் என்ற வினா எழுகிறது.
அந்த அளவிற்கு இந்திய ஊடகவியலாளர்கள் மனிதாபிமானமற்றவர்களாகி விட்டனரா என்று ஏன் நாம் வினவ வேண்டியுள்ளது. காரணம், நேற்று அதிகாலை இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் நடந்த அத்துமீறல்கள்கள், அந்த மக்கள் பட்ட அவலங்கள் ஆகியன தொடர்பான காணொளியை வெளியிட்டது.

50 நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடிய அந்தக் காணொளி - நன்கு சோதிக்கப்பட்டு, நேராக படம்பிடிக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்த பின்பு ஒளிபரப்பப்பட்டதாகும். அதனைக் கண்ட உலக நாடுகளின் அரச பிரதிநிதிகளும், மக்களும் பெரும் துயருக்கு ஆளானார்கள். அவர்களில் பலர் இந்த அநீதியை இழைத்தவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இங்கிலாந்து, அமெரிக்க அரசு பிரதிநிதிகள் குரல் கொடுத்தனர். ஆனால் இந்தியாவி்ன் எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவலாக அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தியா என்பது ஒரு நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தொலைக்காட்சிகளில் பாட்டுப் பாடி எவ்வளவுதான் பரப்புரை செய்தாலும், இந்தியாவின் ஒரு இன இந்தியனின் துயரம் இதர இனத்தின் இந்தியர்களுக்கு ஒரு செய்தி கூட இல்லை என்பதுதான் வருத்தமானதாகும்.
இந்திய நாட்டு அரசுக்கு மனிதாபிமானம் என்பது ஒரு அரசு நெறி இல்லை என்பதை அது காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்கள், தண்டகாரண்யம் ஆகிய இடங்கள் மட்டுமின்றி, தமிழினப் படுகொலைக்கு உதவியதில் நிரூபணமானது.
ஆனால் இந்தியர்களுக்கும் மனிதாபிமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? இந்தியர்கள் என்று கருதுபவர் ஒவ்வொருவரும் சிந்திக்கட்டும்.
நன்றி - தமிழ் வெப்துனியா.கொம்

செவ்வாய், 19 ஜூலை, 2011

ஓட்டப்பிடாரம் தாசில்தார் இடமாற்றம் திடீர் ரத்து வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பு

 ஓட்டப்பிடாரம் தாசில்தார் மாற்றம் நிறுத்தப்பட்டு மீண்டும் அவரே பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ரெகுலர் தாசில்தாராக வருவதற்கு தாசில்தார் கருப்பசாமி முயற்சி செய்தார். சில அதிமுக விஐபிக்களும் அவருக்கு சிபாரிசு செய்யப்பட்டனர்.ஆனால் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் மீண்டும் பணியாற்ற வாய்ப்பளித்தால் பிரச்னை வரும் என்பதால் அவரை சாத்தான்குளம் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டு அவர் அங்கு பணி செய்து வருவதாக வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதே போல் தாசில்தார் மாற்றத்தில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் மணி மாற்றம் செய்யப்பட்டு அங்கு தாசில்தார் சுப்பையன் நியமிக்கப்பட்டார். மணி தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.இதற்கிடையில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி வருவாய்துறை அமைச்சரை சந்தித்து தாசில்தார் மணி அங்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தாசில்தாராக மணி இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு வருவாய்துறை மேலிடத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்ததாக தெரிகிறது.இதனை தொடர்ந்து மீண்டும் ஓட்டப்பிடாரம் ரெகுலர் தாசில்தாராக மணி தொடர அனுமதிக்கப்பட்டு ஆர்டர் போடப்பட்டதாக வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓட்டப்பிடாரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்ட சுப்பையன் தூத்துக்குடி சுனாமி திட்ட தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில் மாறுதல் செய்யப்பட்டு அதே இடத்தில் மீண்டும் பணி வழங்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

HC reserves orders in Ottapidaram groundwater case

 

Elaborate arguments advanced by lawyers and Puthiya Tamizhagam leader K. Krishnasamy for over three hours
The Madras High Court Bench here on Monday reserved its orders on a batch of criminal revision petitions filed by private companies including a power generation company and a seafood processing unit challenging an order passed by the Kovilpatti Revenue Divisional Officer in Tuticorin district on June 6 banning sale of groundwater in and around Ottapidaram.

Justice S. Palanivelu deferred his verdict after hearing elaborate arguments, for over three hours, advanced by counsel for the petitioners as well as Puthiya Tamizhagam (PT) president K. Krishnasamy, also a Member of the Legislative Assembly representing Ottapidaram constituency, who included himself as a party to the case voluntarily in public interest.
The judge allowed an impleading petition and permitted him to argue the case.
The MLA insisted on vacating the stay imposed by the court on June 13 against the operation of the RDO's ban order. He contended that large scale commercial exploitation of groundwater had led to scarcity of water for drinking as well as agricultural purposes in his constituency.

“If these private companies want water let them install desalination plants and use the sea water. They can also take water from any other place which has abundant groundwater but not in Ottapidaram which has been classified as a critical area in terms of groundwater level. If they feel that the TWAD (Tamil Nadu Water Supply and Drainage) Board was not supplying enough water to them, they should sort it out with the Board.

“These companies had established their units in Ottapidaram just because the land was available for a cheap price and they are now bent upon exploiting the groundwater,” he said. Mr. Krishnasamy also took strong exception to an allegation levelled by one of the petitioner's counsel that the MLA had impleaded himself in the case with a political motive.

The PT leader said that he was arguing the case only because the residents of Ottapidaram had made umpteen petitions to him, in his capacity as their representative in the Assembly, to stop the exploitation of groundwater in the constituency. Immediately, the judge intervened and asked the counsel to restrict his arguments to the facts related to the case.

Later, the counsel contended that the RDO had misguided himself by imposing the ban under Section 133 of Code of Criminal Procedure after terming the sale of water as a ‘public nuisance.'

Ban on exploitation of water was contemplated under the Tamil Nadu Ground Water (Development and Management) Act. But it had not been notified till date, they claimed.

COURTESY: THE HINDU - MADURAI 

புதன், 13 ஜூலை, 2011

மறுபிறவி வழங்கியவர் முதல்வர் : டில்லி சிறப்பு பிரதிநிதி அசோகன்

 
 
திருவாரூர்: தமிழக அரசு சார்பில் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அசோகன் நேற்று திருவாரூர் வந்தார். அவ ரை சுற்றுலாமாளிகையில் திருவ õரூர் கலெக்டர் முனியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அசோகன் கூறியதாவது: அரசியல் வாழ்க்கையில் ம றுபிறவியை முதல்வர் ஜெயலலி தா எனக்கு வழங்கியுள்ளார். (தன் னை அறியாமலே கண் கலங்கினார்.) நான் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய பதவியை வழங்கியுள்ள முதல்வருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் எனது நன்றியை தெரிவிக்காமல் இந்த பதவிக்குரிய பணிகளை முழுமையாக செய்து தமிழகத்துக்கும், முதல்வர் ஜெயலிலதாவுக்கும் நற்பெயரையும் எடுத்து கொடுப்பேன்.

தமிழகத்துக்கு மட்டுமின்றி இம்மாவட்டத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்வதிலும் எனது பணியை தொடருவேன். கடந்த ஐந்தாண்டு காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்த டில்லி தமிழ்நாடு இல்லம் தற்போது முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு அங்குள்ள அண்ணாதுரை, திருவள்ளுவர் போன்றவர்களின் சிலைகளுக்கு தினமும் மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆர்.டி.ஓ., ஸ்ரீராமன், அ.தி. மு.க., மாவட்ட பொருளாளர் பன் னீர்செல்வம், ஹோட்டல் சங்க தலைவர் கணேசன், மெடிக்கல் சங்க தலைவர் வீரையன் உட்பட பலர் வரவேற்றனர்

வியாழன், 7 ஜூலை, 2011

நிலத்தடி நீரை எடுப்பதால் பாதிப்பு ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வாதம் : அரசின் கொள்கையை தெரிவிக்க உத்தரவு


மதுரை : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீரை எடுப்பதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வாதாடினார். இவ்விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு குறித்து இன்று தெரிவிக்க அரசு தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

 
ஒட்டப்பிடாரம் பகுதியில் தனியார்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார்களுக்கு விற்கின்றனர். இதை கண்டித்து மக்கள் போராடினர். நிலத்தடி நீரை எடுக்க ஆர்.டி.ஒ., தடை விதித்தார். அதை எதிர்த்து பிச்சைபெருமாள் உட்பட சிலர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட், ஆர்.டி.ஒ., உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை விலக்க கோரி கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மனு செய்தார்.

நேற்று வழக்கு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வக்கீல்கள் தாழைமுத்தரசு, பாஸ்கர் மதுரத்துடன் ஆஜரானார். பின், கிருஷ்ணசாமியே வாதிடுகையில், ""ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தண்ணீர் தேவையை அவர்களாக பார்த்து கொள்ள வேண்டும். ஒட்டப்பிடாரம் பகுதியில் ஏழை விவசாயிகள் உள்ளனர். நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவதால், அவர்களுக்கு பாதிப்பு. தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகு கீழே சென்று விட்டது,'' என்றார்.

அரசு கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியன் மற்றும் சிறப்பு பிளீடர் மகேந்திரன், மின் உற்பத்தி செய்யும் இரு நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. பொது பயன்பாட்டுக்காக சப்ளை நடக்கிறது, என்றனர்.

பின் நீதிபதி, கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஒ., உத்தரவுகள் பராபட்சமின்றி இருக்க வேண்டும். ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் சுரண்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது சீரியஸ் பிரச்னை. இதுபோல பல இடங்களில் பிரச்னையுள்ளது. நீர் மேலாண்மை பாலிசி குறித்து அரசு கொள்கை என்ன? என விளக்க வேண்டும். மின் உற்பத்தி தவிர பிற பயன்பாட்டுக்கு தண்ணீர் சப்ளை செய்வதில்லை என கொள்கை ஏதும் உண்டா? இதுகுறித்து அரசு தரப்பு நாளை(இன்று) விரிவாக தெரிவிக்க வேண்டும், என உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

வழக்கில் கிருஷ்ணசாமியை எதிர்மனுதாரராக சேர்த்ததை எதிர்த்து பிச்சைபெருமாள் சார்பில் வக்கீல்கள் முத்தல்ராஜ், பழனியாண்டி சீராய்வு மனு செய்தனர். மனுவை நீதிபதிகள் ஜோதிமணி, அருணாஜெகதீசன் தள்ளுபடி செய்தனர்.