எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஆந்திர அரசைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்ய்பபட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாடடம் நடந்தது. 

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உண்மைக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிததிருந்தார். 

அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கண்ணன், அண்பு ராஜ், இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன், மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.பி. சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக