எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 23 ஏப்ரல், 2015

தனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக்கிறது : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..

சென்னை: தனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக்கிறது என சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதலீட்டாளர் மாநாடு, மெட்ரோ ரயில், புதிய பேருந்துகள் இயக்கம் காலதாமதம் என புகார் தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதமாக தமிழக அரசு முடங்கி போய் உள்ளதாகவும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை அடகு வைக்கும் விதமாக நில எடுப்பு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது என்றும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரம் மற்றும் உணவுத்துறையில் ஊழல் நிறைந்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக