எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 12 பிப்ரவரி, 2014

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம்



தென்காசியில் புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
ஆலோசனை கூட்டம்
புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, ஆலோசனை கூட்டம் ஆகியவை தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் அரவிந்த் ராஜா, சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராம்ராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. அணிக்கு ஆதரவு
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். எனவே இப்போதே கூட்டணி கட்சியினருடன் அறிமுகமாகி நன்கு பழகிக்கொள்ளுங்கள். தென்காசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றவர்களால், இந்த தொகுதிக்கு இதுவரை எந்த வளர்ச்சியும் கிடைக்கவில்லை. இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
புதிய தமிழகம் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள். சுவர்களில் விளம்பரம் எழுத இடம் பிடித்துக் கொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தீவிரமாக தேர்தல் பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, தென்காசி தொகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் முகம்மது கனிப், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தென்காசி ஒன்றிய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக