ஞாயிறு, 28 ஜூலை, 2013
வெள்ளி, 26 ஜூலை, 2013
வியாழன், 25 ஜூலை, 2013
நெல்லை தாமிரபரணி ஆற்றில் பலியானவர்களுக்கு டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் அஞ்சலி
1999–ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் பேரணி நடைபெற்றது. அப்போது நடந்த கலவரத்தில் நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் பலியானார்கள்.
புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,அவர்கள் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசாரின் தாக்குதலில் ஒரு வயது விக்னேஷ் உள்பட 17 பேர் உயிர் நீத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து 14 வருடங்களாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக முதல்முதலில் குரல்கொடுத்தது புதியதமிழகம் கட்சி தான். அந்த கோரிக்கையை வென்று எடுப்பதே எங்களுடைய லட்சியம், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம அந்தஸ்துவேண்டும். எங்களுக்கு உரிய உரிமையை பெறவேண்டும் என்பதே எங்களுடைய லட்சியாகும். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 பேர்களுடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். அரசுகள் செய்யவில்லை. எங்கள் சொந்த செலவில் மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கித்தரவேண்டும்.’’ என்றார்..

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...
திருநெல்வேலி: நெல்லை ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவுத்தூண் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மாஞ்சோலை, வால்பாறை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 10 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கேட்டு நெல்லையில் 99ம் ஆண்டு நடந்த பேரணி மீது போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தொழிலாளர்கள் பலியான நாளில் 14 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தி வருகிறோம்.நாட்டிலேயே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியது புதிய தமிழகம் கட்சி மட்டுமே. தியாகங்களுக்கு விலை இல்லாமல் போகாது. மக்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம்.நெல்லை ஆற்றங்கரையில் தொழிலாளர்கள் உயிர்நீத்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க இடம் ஒதுக்க அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...
அரசு பயங்கரவாதம் என்ற கடிவாலங்களை உடைத்து எரியும் அளவில் அனல் பறக்கும் உரைவீச்சு, 17 மாஞ்சோலை போராளிகளுக்கு வீர வணக்கம் நிகழ்துவதற்கு முன்பு நெல்லை ரயில் நிலையத்தில் நடந்த கண்டன கூட்டம்.அதன் பிறகு நடந்த அமைதி ஊர்வலம் அதில் பங்கேற்ற மக்கள் வெள்ளத்தில் சம்பித்தது நெல்லை.
நேற்று வந்த செய்தி அறிக்கை: அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் மாஞ்சோலை போராளிகளுக்கு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நினைவு தூணை
அமைக்க புதிய தமிழகம் நிச்சியம் முயற்சி எடுக்கும் என்று மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.
போராளிகளுக்கு போராளிகளின் வீரவணக்கம்!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி திருநெல்வேலியில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த மாபெரும் பேரணியில் நடத்தப்பட்ட தமிழக அரசின் அரச பயங்கரவாதத்தால் உயிர் நீத்த சிறுவன்.விக்னேஷ் உள்ளிட்ட 17 போராளிகளுக்கு, அவர்களின் நினைவு தினமான இன்று (23.07.2013) புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
செவ்வாய், 23 ஜூலை, 2013
தென் மாவட்டங்களில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ..
புதிய
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றைத் தீர்த்து வருகிறார். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் குலவையிட்டும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். டாக்டர் அய்யா அவர்கள் தென்தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக பல கிராமங்களில் தேவர், நாடார் உள்ளிட்ட மாற்று சமுதாய மக்களும் வரவேற்பளித்து தங்களுக்கான கோரிக்கை மனுக்களை டாக்டர் அய்யா அவர்களிடம் நேரடியாக அளித்தனர். மக்களிடம் கல்வி, மது ஒழிப்பு, ஒற்றுமை பற்றி பேசிய டாக்டர் அய்யா அவர்கள் தொழில் தொடங்குவது, குழு அமைப்பது, சுய வேலைவாய்ப்பை எப்படி உருவாக்குவது, என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினார். நேரடியாக தெருக்கள், கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவ்வப்போதே உரிய நடவடிக்கை எடுத்தார். அடிப்படைத் தேவைகள், சமூகப் பிரச்சினைகள், சமூக சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கண்டார். மேலும் தொழில் தொடங்குவது, குழு அமைப்பது, சுய வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு முகாம்கள் புதிய தமிழகம் கட்சி சார்பில் விரைவில் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும் என்று கூறினார். பல கிராமங்களில் நம் மக்கள் கண்ணீர் மல்க விடுத்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தன் சொந்த உதவியாக பல்வேறு உதவிகளை செய்தார். அவற்றையெல்லாம் படம் எடுத்து இங்கே பதிவு செய்யலாம். ஆனால் அது புதிய தமிழகத்துக்கான விளம்பரமாகக் கூடும் என்பதாலும், அது புதிய தமிழகத்தின் கொள்கையும் அல்ல என்பதாலும் இங்கே பதிவு செய்யவில்லை. 60 வயதைத் தாண்டிய பிறகும்கூட எவ்வித சலிப்பும், சோர்வும் இல்லாமல் நடுஇரவு 2 மணிவரை துங்காமல், சாலைவசதிகள் சரியாக இல்லாத மூலைமுடுக்கு கிராமங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்து வரும் டாக்டர் அய்யா அவர்களின் சமூகப்பணி, கொள்கை பிடிப்பு, உடனடித் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றைப் பார்த்து பல்வேறு சமூகத்தவர்கள் தொடர்ச்சியாக புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக நேற்று கூட (18.7.2013) கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மாற்று சமுதாய பிரமுகர்கள் டாக்டர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டு சமத்துவத்தை வளர்த்துவரும் சமூக சமநீதி போராளி டாக்டர் அய்யா அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
திங்கள், 15 ஜூலை, 2013
தென் மாவட்டங்களில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களுக்கு கொடுக்கபப்ட்ட வரவேற்பு ...
தென் மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களுக்கு நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், தேவிபட்டினம் காலனியில் கொடுக்கபப்ட்ட வரவேற்பு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)