எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அதிமுக.,-திமுக., ஊழல் கட்சிகள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சாடல்

தென்காசி : "அ.தி.மு.க.,-தி.மு.க., ஊழல் கட்சிகளாகும்' என மேலகரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.மேலகரம் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். மேலகரம், நன்னகரம் பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசும் போது, ""மேலகரம் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் சந்திரனுக்கு கைக்கடிகாரம் சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, தெரு விளக்கு வசதி போன்றவற்றை நிறைவேற்றி தருவார். நேர்மையாகவும், நியாயமாகவும் நிர்வாகம் நடக்க புதிய தமிழகம் வேட்பாளர்களை ஆதரியுங்கள்.மத்திய அரசு ஆண்டுதோறும் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை முறையாக ஊழல் இன்றி நியாயமாக பயன்படுத்தி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற புதிய தமிழகம் நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க.,- தி.மு.க.,இரண்டு கட்சிகளுமே ஊழல்களில் ஊறிப் போனவை. நாங்கள் தூய்மையான நிர்வாகத்தை அளிப்போம்'' என்றார் கிருஷ்ணசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக