எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 3 ஜனவரி, 2015

சொக்கம்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கவிழா

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட சொக்கம்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் வீரா.அரவிந்தராஜா, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் திரு.குமார்பாண்டியன், கடையநல்லூர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.காசிப்பாண்டியன் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். விழா ஏற்பாடுகளை அந்த கிராமத்தின் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மற்றும்மாணவரணியினர் சிறப்பாக செய்திருந்தனர். ஒருகாலத்தில் அதிகமான தீண்டாமைக் கொடுமைகளைச் சுமந்து நின்ற கிராமங்களில் ஒரு கிராமம் தான் சொக்கம்பட்டி கிராமம். ஆனால் இன்று சமூகத் தளத்தில் அந்த கிராம தேவேந்திரகுல வேளாளர்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் உயர்ந்து நிற்பதைக் காணும்போது மிகப் பெருமையாக இருந்தது. சொக்கம்பட்டி கிராமத்தின் அத்தகைய உயர்வுக்கு காரணம் டாக்டர் அய்யா அவர்களின் வருகை தான் என்று கூறியபோது இன்னும் பெருமையாக இருந்தது. அந்த ஊரில் ஆதிக்கம் செலுத்திவந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசியல் பலத்தோடும், பணபலத்தோடும் எதிர்த்து நின்றபோது சொக்கம்பட்டி தேவேந்திரகுல வேளாளர்கள் ஒற்றுமை எனும் ஒற்றை ஆயுதத்தால் தங்களது தன்மானத்தை மீட்டெடுத்தனர். இன்றும் அந்த கிராமத்தில் இளைஞர்களும், மாணவர்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது பூரிப்பாகத்தான் இருந்தது. நம் சமூகம் அதிகமாக வாழக்கூடிய பல கிராமங்கள் இன்னும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தங்களுக்குள் தயக்கம் காட்டி வருகிற இக்காலத்தில் நம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் அது சொக்கம்பட்டி கிராமம் என்று பெருமையாகச் சொல்லலாம். விழாவினை ஏற்பாடு செய்த சொக்கம்பட்டி கிராம தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மற்றும் மாணவரணி தோழர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக