எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல் புதிய தமிழகம் புறக்கணிப்பு கிருஷ்ணசாமி பேட்டி -


.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: சென்னையில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அவசர கூட்டம் இன்று காலை நடந்தது.இந்த கூட்டத்துக்கு கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் கிருஷ்ணசாமி,  நிருபர்களிடம் கூறியதாவது:மறைந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக  உள்ளது. வரும் 11ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலிக்கு வாடகை  வாகனங்களில் வர அரசு தடை ஏற்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கவில்லை. கடந்த 3  ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்து தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த  உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது எந்தவிதத்திலும் நாட்டு மக்களுக்கோ, ஜனநாயகத்துக்கோ பயன் அளிக்காது. எனவே, உள்ளாட்சி இடைதேர்தலை புதிய  தமிழகம் புறக்கணிக்கிறது.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக