எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 13 செப்டம்பர், 2014

அக்.6-இல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு..


பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய, புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி வரும் அக். 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கடந்த 2011-இல் நடந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அரசு விதித்துள்ளது.
6 பிரிவுகளாக பிரிந்துள்ள தாழ்த்தப்பட்டோரை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் பிறந்த நாளையும், நினைவு நாளையும் அரசே கொண்டாட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீட்டினை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோரை ஒருங்கிணைத்து வரும் அக். 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக