அடிப்படையில் பொதுவுடைமைவாதியான தோழர்.பி.வி.பக்தவத்சலம் அனைவராலும் தோழர்.பி.வி.பி. என்று அன்போடு அழைக்கப்படக் கூடியவர். மனித உரிமைப் போராளி எனும் சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். தமிழகத்தில் பலதரப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மக்களின், மனிதர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்த மார்க்சிய-லெனினிய புரட்சிகர இயக்கத்தின் தோழர்களோடு இணைந்து தனது மனித உரிமைப் போரை தொடுக்கத் துவங்கியவர், ”சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளைப் பெறாமல் வேறு உரிமைகளில் பயனில்லை” என்று முழங்கினார். தமிழகத்தில் அதிகமாக சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்து காணப்படும் தருமபுரி மாவட்டத்தின் ஒரு காட்டுப்பகுதில் கட்டப்பட்ட தனது குடியிருப்புக்கு செம்பண்ணை என்று பெயரிட்டு அங்கிருந்து தனது மார்க்சிய-லெனினிய ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்தார். ஒருமுறை, அந்த செம்பண்ணையில் வைத்து தோழர்.பி.வி.பி.-யை தீர்த்துக்கட்டிவடலாம் என்று கங்கணம் கட்டிய தமிழக காவல்துறையினர் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை; எனவே அப்பகுதி கூலிப்படையினரை வைத்து தோழர்.பி.வி.பி.-யை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டிய காவல்துறையினர், கூலிப்படையினரிடம் சென்று உதவி கேட்டபோதுதான் அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. என்னே ஆச்சரியம்! “மனித உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிற ஒரு போராளியை நாங்கள் மட்டுமல்ல; வேறு எந்த கூலிப்படையினரும் கொல்ல முன்வரமாட்டார்கள்” என்று கூலிப்படையினரே கூறிய பின்பு தான் காவல்துறையினரின் மனமும் கலங்கியது. தனது போராட்ட பணி மூலம் மக்களின் மனதை மட்டுமல்ல, கூலிப்படையினரின் மனதையும் கவர்ந்த தோழர்.பி.வி.ப. அவர்களின் வரலாற்றை நீக்கிவிட்டு மனித உரிமை போராட்ட வரலாற்றை எழுதிவிட முடியாது. போராளிகள் மீது மிகுந்த பற்று கொண்ட தோழர்.பி.வி.பி. தனக்கு பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கும் அக்காலத்தில் போராளிகளாகத் திகழ்ந்த பெண் போராளிகளின் பெயர்களையே சூட்டினார். 1990-களில் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான உரிமை மீட்புப் போரில் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய தன்னுடைய மார்க்சிய-லெனினிய தோழரான டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களோடு தானும் இணைந்து பட்டியலின மக்களுக்கான உரிமைமீட்பில் பங்குகொண்டார். அதோடு மட்டுமல்ல, 1997-ல் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிறுத்தி துவங்கப்பட்ட ”புதிய தமிழகம்” கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தான் முழுமையான விடுதலை அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த தோழர்.பி.வி.பி. “தேர்தல்களில் பங்கெடுத்தல் கூடாது” என்கிற மார்க்சிய-லெனினிய இயக்க கோட்பாட்டையும் புரட்சிகர இயக்க தோழர்களின் விமர்சனங்களையும் மீறி, புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக இந்திய பாராளுமன்ற, தமிழக சட்டமன்ற தேர்தல்களில் களமிறங்கினார். 1999-ல் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திருநெல்வேலி (பொது) நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராய் போட்டியிட்டு சுமார் 1,12,941 வாக்குகளும், அதைத்தொடர்ந்து 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேடப்பட்டி (பொது) தொகுதியில் போட்டியிட்டு 26,958 வாக்குகளும் பெற்று தமிழக பிரதான கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைவரும் மிரளும் வகையில் தனது போர்குண வீரியமிக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வாதங்களைப் பதிவு செய்த தோழர்.பி.வி.ப. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க புதிய தமிழகம் கட்சி தொடுத்த அனைத்து வழக்குகளையும் தானே முன்னின்று வாதாடி வென்றுகாட்டினார். குறிப்பாக கண்டதேவி தேரோட்டத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தொடுக்கப்பட்ட வழக்கில், ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்வடம் பிடிப்பதற்கான உரிமையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தந்தார். மேலும் பட்டியலின மக்களுக்கான 18 % இடஒதுக்கீட்டில் 6 %-மே நிரப்பப்பட்ட நிலையில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தொடுத்த வழக்கில் இவருடைய பங்கு குறிப்பிடத்தகுந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலிஉயர்வுக்காக புதிய தமிழகம் தொழிற்சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலும் இவருடைய பங்கு மகத்தானது. அவர் மறைந்தாலும் அவர் சார்பாக புதிய தமிழகம் கட்சி தொடுக்கும் குறிப்பாக உள்ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் கவனித்து வரும் தோழர்.பி.வி.பி. அவர்களின் புதல்வி வழக்கறிஞர்.திருமதி.அஜிதா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர்.திரு.சரவணவேல் ஆகியோருக்கும் இந்த சமூகம் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளது. தன் வாழ்நாளெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்புக்காக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடிய தோழர்.பி.வி.ப. ஆசிய கண்டத்தின் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆவார். அமெரிக்கா, ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட முற்பட்டபோது உலகம் முழுவதிலுமிருந்து 6 வழக்கறிஞர்கள் சதாம் உசேனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக வாதாட தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆசிய கண்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் தோழர்.பி.வி.பி. என்பது அவரின் வரலாற்றில் மறைக்கப்பட முடியாத நிகழ்வாகும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தங்கள் சமுதாயத்துக்காகப் போராட துணிவிழந்து நிற்கிற இக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவராகப் பிறக்காவிட்டாலும் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்புக்காகவே வாழ்ந்து மறைந்த மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் தோழர்.பி.வி.பக்தவத்சலம் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினமான 02.09.2014 அன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்
திங்கள், 22 செப்டம்பர், 2014
சனி, 13 செப்டம்பர், 2014
அக்.6-இல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு..
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய, புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி வரும் அக். 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கடந்த 2011-இல் நடந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அரசு விதித்துள்ளது.
6 பிரிவுகளாக பிரிந்துள்ள தாழ்த்தப்பட்டோரை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் பிறந்த நாளையும், நினைவு நாளையும் அரசே கொண்டாட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீட்டினை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோரை ஒருங்கிணைத்து வரும் அக். 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி: விதிமுறைகளை மீறியதாக கிருஷ்ணசாமி மீது வழக்கு
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 11–ந் தேதி அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி செலுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாலை 3 மணிமுதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வராமல் 4.20 மணிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 5.30 மணி வரை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேந்தோணி கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்படி விதிகளை மீறிய கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதிய தமிழகம் கட்சி நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது
ஓமலூர்:ஓமலூர் அருகே, புதிய தமிழகம் கட்சி நிர்வாகியை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கும்பலில், முக்கிய குற்றவாளியை, போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே, ஆர்.சி., செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து, இவரது மகன் பாபு, 37. இவர், புதிய தமிழகம் கட்சியின், மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாபு தனது பைக்கில், செம்மாண்டப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அவரை வழி மறித்து தாக்கிய மூன்று பேர் கொண்ட கும்பல், பாபுவின் கழுத்தில், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றது. படுகாயமடைந்த பாபு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணை நடத்திய, ஓமலூர் போலீஸார், பாலிக்காடு காலனியை சேர்ந்த நல்லப்பன் மகன் இளங்கோவன், 31, என்பவரை, நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, பாலிக்காடு காலனியை சேர்ந்த ராமச்சந்திரன், ஜெகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த தாமதமாக வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினருக்கு பகல் 2 முதல் 3 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வராமல், மாலை 5 மணிக்கு மேல் வந்து அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டாக்டர் க.கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி: விதிமுறைகளை மீறியதாக கிருஷ்ணசாமி மீது வழக்கு
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 11–ந் தேதி அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி செலுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாலை 3 மணிமுதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வராமல் 4.20 மணிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 5.30 மணி வரை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேந்தோணி கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்படி விதிகளை மீறிய கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு...
கோவில்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரன்தியாகி இம்மானுவேல் சேகரனின் 57–வது நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புது ரோடு அம்பேத்கார் சிலை அருகே அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உருவ படத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் பி.அன்புராஜ் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட பொறுப்பாளர் கே.கருப்பசாமி, மாநில தொண்டர் அணி செயலாளர் பூவானி லட்சுமண பாண்டியன், ஒன்றிய தலைவர் கே.கனகராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் எம்.மாடசாமி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 10 செப்டம்பர், 2014
செவ்வாய், 9 செப்டம்பர், 2014
புதன், 3 செப்டம்பர், 2014
உள்ளாட்சி இடைத்தேர்தல்: புதிய தமிழகம் புறக்கணிப்பு...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது: உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய எதிர்க் கட்சிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் கொடுக்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மறைந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்கு வாடகை வாகனங்களில் வர அரசு தடை ஏற்படுத்தக் கூடாது என்றார் அவர்.
செவ்வாய், 2 செப்டம்பர், 2014
உள்ளாட்சி இடைத்தேர்தல் புதிய தமிழகம் புறக்கணிப்பு கிருஷ்ணசாமி பேட்டி -
.
சென்னை: சென்னையில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அவசர கூட்டம் இன்று காலை நடந்தது.இந்த கூட்டத்துக்கு கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் கிருஷ்ணசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:மறைந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக உள்ளது. வரும் 11ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலிக்கு வாடகை வாகனங்களில் வர அரசு தடை ஏற்படுத்தக்கூடாது.
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்து தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது எந்தவிதத்திலும் நாட்டு மக்களுக்கோ, ஜனநாயகத்துக்கோ பயன் அளிக்காது. எனவே, உள்ளாட்சி இடைதேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்கிறது.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)