எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 30 ஜூலை, 2014

தமிழக சட்டமன்றத்தில், பல்வேறு காரணங்களுக்காக இடதுசாரிகள், புதிய தமிழகம் மற்றும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு ....



சட்டப்பேரவையிலிருந்து இடதுசாரிகள், புதிய தமிழகம், பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு..
தமிழக சட்டமன்றத்தில், பல்வேறு காரணங்களுக்காக இடதுசாரிகள், புதிய தமிழகம் மற்றும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ-வை, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

இதேபோல் தொகுதி பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, பாமக உறுப்பினர் கணேஷ்குமார் வெளிநடப்பு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக