எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 25 ஜூலை, 2014

தாமிரபரணி தியாகிகளுக்கு அஞ்சலி - டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் பேரணி..


1999-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு தொழிலாளர் அமைப்புகள்தமிழ் மாநில காங்கிரஸ்சி.பி.அய்.சி.பி.அய்(எம்), அய்க்கிய ஜமாத்,  உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
பேரணியை வழிநடத்தி வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.­ இதையடுத்து பேரணியாகச் சென்றவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிய சூழலில் திடீரென காவல்துறையினர் தடியடி நடத்தவே நிலைகுலைந்த கூட்டம் அங்கும் இங்கும் ஓடியது.
தாமிரபரணி ஆற்றை ஒட்டிய சாலையின் இருபுறமும் காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு தொழிலாளர்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்த,செய்வதறியாது திகைத்த தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து உயிர் காக்க  முயன்றனர். அவர்களை வெளியே வரவிடாமல்  அடித்தே  கொன்றது காவல் துறைதிட்டமிட்டு காவல் துறை நடத்திய இந்த  கொடூரமான தடியடியில்  பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.இந்தப்படுகொலை நாட்டையே உலுக்கியது.

இச்சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி  திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக சென்று உயிர் இழந்த 17 தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில்  டாக்டர்.க.கிருஷ்ணசாமி  அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக