எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு - தேயிலைத் தோட்ட தொழிலாளர் நலனில் மருத்துவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்


தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக புதிய தமிழகம் கட்சியின் கொடியேற்றி மக்கள் சந்திப்பு  நடத்தி குறைகளை கேட்டுவரும்  கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ,. அவர்கள் கடந்த 15 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக  அங்கு சென்றார்.
தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்ற தலைவர் அவர்களுக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தலைவரைப் பார்த்ததும் அம்மக்கள் அளவு கடந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்ததை நம்மால் காண முடிந்தது.
சிறுவர், சிறுமியர்கள் துள்ளிக் குதித்து ஆரவாரமிட்டபடி தலைவர் அவர்களைக் காண ஓடி வந்தனர்.
முதலாவதாக நாலுமுக்கு எஸ்டேட் மக்கள் தலைவரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
1. காலை சரியாக 7.30 மணிக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளப் பணத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
2. வேலை முடிந்து திரும்புவதற்கு மாலை 7 மணி ஆகுது.
3. நிர்வாகம் தொழிற்சங்க போர்டு வைக்க அனுமதிப்பதில்லை. காவல்துறை மூலம் சங்கப் போர்டை  அகற்றியது.
4. நிர்வாகத்தின் கால்நடைகளைத் தவிர தொழிலாளர்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை.
என அம்மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இரண்டாவதாக ஊத்து எஸ்டேட் சென்ற தலைவர் அவர்களுக்கு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மக்களும் தலைவரிடம் சில கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
1. பணி ஓய்வு பெற்று தொழிலாளர்களுக்கு  தமிழக அரசு மூலம் இலவச  வீட்டு மனை பட்டா வேண்டும்
2. சாலைவசதி, பேருந்து வசதி
3. மருத்துவமனையை தனியாருக்கு ஒப்பந்ததிற்கு விட்டு இருக்கிறார்கள். தனியாரோ ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.
4. பெண்கள் பிரசவத்திற்கு சென்றால் கூட சரியாக கவனிப்பதில்லை.

மாஞ்சோலை மக்கள் திரளாக கூடி அங்கும் ஆரவாரமிக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மக்களும் சில கோரிக்கைகளை வைத்தனர்.
1. இலவசபட்டா
2. ரேசன் பொருட்கள் சரியாக விநியோகிப்பதில்லை.
3. திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து தங்களுக்காக இயக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை கேட்டறிந்த தலைவர் அவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என அம்மக்களிடம் உறுதியளித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக