எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ

ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இட ஒதுக்கீட்டு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடத்திற்கு மேலாக தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கு தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு 15000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டு முறை அறவே கடைப்பிடிக்கப்படவில்லை.
மொத்த காலிப் பணியிடங்களில் 31 சதவிகிதம் பொதுப் பிரிவினருக்கும், 30 சதவிகிதம் பிற்பட்டோருக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்பட்டோருக்கும், 18 சதவிகிதம் பட்டியலினத்தவருக்கும், 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் என ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை 100 அல்லது 200 புள்ளிகள் சுழற்சி முறையில் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் சுழற்சி முறை ( Roster ) கடைப்பிடிக்கப்படாததின் விளைவாக பட்டியலின வகுப்பினர், மிக மிக பின் தங்கிய வகுப்பினர், பிற்பட்டோர், பழங்குடியினர் தங்களுக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தேர்வு பெற்ற ஒவ்வொரு பிரிவினரின் பின்னடைவு பணியிடங்களைக் கணக்கிட்டு தற்பொழுது நடைபெற்றுள்ள 17000 பணி இடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சுழற்சி முறையில் நிரப்பிய பின்னரே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.இதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பாக வரும் 26 ஆம் தேதி எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக