எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு - தேயிலைத் தோட்ட தொழிலாளர் நலனில் மருத்துவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்


தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக புதிய தமிழகம் கட்சியின் கொடியேற்றி மக்கள் சந்திப்பு  நடத்தி குறைகளை கேட்டுவரும்  கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ,. அவர்கள் கடந்த 15 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக  அங்கு சென்றார்.
தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்ற தலைவர் அவர்களுக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தலைவரைப் பார்த்ததும் அம்மக்கள் அளவு கடந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்ததை நம்மால் காண முடிந்தது.
சிறுவர், சிறுமியர்கள் துள்ளிக் குதித்து ஆரவாரமிட்டபடி தலைவர் அவர்களைக் காண ஓடி வந்தனர்.
முதலாவதாக நாலுமுக்கு எஸ்டேட் மக்கள் தலைவரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
1. காலை சரியாக 7.30 மணிக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளப் பணத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
2. வேலை முடிந்து திரும்புவதற்கு மாலை 7 மணி ஆகுது.
3. நிர்வாகம் தொழிற்சங்க போர்டு வைக்க அனுமதிப்பதில்லை. காவல்துறை மூலம் சங்கப் போர்டை  அகற்றியது.
4. நிர்வாகத்தின் கால்நடைகளைத் தவிர தொழிலாளர்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை.
என அம்மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இரண்டாவதாக ஊத்து எஸ்டேட் சென்ற தலைவர் அவர்களுக்கு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மக்களும் தலைவரிடம் சில கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
1. பணி ஓய்வு பெற்று தொழிலாளர்களுக்கு  தமிழக அரசு மூலம் இலவச  வீட்டு மனை பட்டா வேண்டும்
2. சாலைவசதி, பேருந்து வசதி
3. மருத்துவமனையை தனியாருக்கு ஒப்பந்ததிற்கு விட்டு இருக்கிறார்கள். தனியாரோ ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.
4. பெண்கள் பிரசவத்திற்கு சென்றால் கூட சரியாக கவனிப்பதில்லை.

மாஞ்சோலை மக்கள் திரளாக கூடி அங்கும் ஆரவாரமிக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மக்களும் சில கோரிக்கைகளை வைத்தனர்.
1. இலவசபட்டா
2. ரேசன் பொருட்கள் சரியாக விநியோகிப்பதில்லை.
3. திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து தங்களுக்காக இயக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை கேட்டறிந்த தலைவர் அவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என அம்மக்களிடம் உறுதியளித்தார்.







ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ

ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இட ஒதுக்கீட்டு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடத்திற்கு மேலாக தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கு தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு 15000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டு முறை அறவே கடைப்பிடிக்கப்படவில்லை.
மொத்த காலிப் பணியிடங்களில் 31 சதவிகிதம் பொதுப் பிரிவினருக்கும், 30 சதவிகிதம் பிற்பட்டோருக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்பட்டோருக்கும், 18 சதவிகிதம் பட்டியலினத்தவருக்கும், 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் என ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை 100 அல்லது 200 புள்ளிகள் சுழற்சி முறையில் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் சுழற்சி முறை ( Roster ) கடைப்பிடிக்கப்படாததின் விளைவாக பட்டியலின வகுப்பினர், மிக மிக பின் தங்கிய வகுப்பினர், பிற்பட்டோர், பழங்குடியினர் தங்களுக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தேர்வு பெற்ற ஒவ்வொரு பிரிவினரின் பின்னடைவு பணியிடங்களைக் கணக்கிட்டு தற்பொழுது நடைபெற்றுள்ள 17000 பணி இடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சுழற்சி முறையில் நிரப்பிய பின்னரே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.இதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பாக வரும் 26 ஆம் தேதி எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

விருதுநகர் மாவட்டம், பானாகுளம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், கரைவளைந்தான்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், பூவாணி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், கொளிஞ்சிப்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், பெரும்பள்சேரி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், பானாகுளம் காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், பாட்டக்குளம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், வி.முத்துலிங்கபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், திருமலாபுரம் புதூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், நாச்சியார்புரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், என்.சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், கூனம்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், தட்டான்குளம்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மாஞ்சோலை வென்ற மன்னரின் மகத்தான மக்கள் சந்திப்பு


தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து சற்று வேறுபட்டு, உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடி வருகின்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள், அனைவரும் நேற்று சுதந்திர தினைத்தை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் முதலாளி வர்க்கத்தால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து சிக்கல்களை சுமந்து இன்றுவரை அந்நியரின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து வரும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய குறைகளை, கோரிக்கைகளை கேட்கும் விதமாக ஒரு நாள் சுற்று பயணமாக மாஞ்சோலை பகுதிக்கு சென்றார். அங்கு தேயிலை தோட்ட தொழிலாளிகளான உழைக்கும் மக்கள் அவரிடம் 3 கோரிக்கைகளை வைத்தனர். மாஞ்சோலை மக்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்றுவரை "தேயிலை தோட்ட தொழிலாளிகளின் தெய்வமாக" தான் கருதுகின்றனர் என்பது அவர்கள் அளித்த வரவேற்பிலேயே தெரிந்தது.

மாஞ்சோலை வென்ற மன்னரின் மகத்தான மக்கள் சந்திப்பு.

புதன், 14 ஆகஸ்ட், 2013

தென் மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், ராஜபாண்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், வெள்ளகால் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், கீழசுரண்டை கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

எனது அரசியல் பயணம் - மத மாற்றங்களைக் குறைத்திருக்கிறோம்... - டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...




நன்றி துக்ளக் வார இதழ்

எனது அரசியல் பயணம் - பொது வாழ்வுக்கு இழுத்தது கிராமத்து சூழ்நிலை- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ..



  

நன்றி துக்ளக் வார இதழ்

எனது அரசியல் பயணம் -தி.மு.க. ஆட்சியில் சோக நிகழ்வு...! - டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ..




நன்றி  துக்ளக் வார இதழ் 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், போகநல்லூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், மேலப்பாட்டாக்குறிச்சி கிராமத்தில் மக்கள் சந்திப்பு

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், கீழப்பாட்டாக்குறிச்சி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், மேலகடையநல்லூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், மேலப்பாவூர் மேலக்காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், மேலப்பாவூர் மேலக்காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நெல்லை மாவட்டம், சங்கனாபேரி கிராமத்தில் மக்கள் சந்திப்பு

நெல்லை மாவட்டம், கண்மணியாபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், ராமேஸ்வரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

புதிய தமிழகத்தின் புரட்சிப்பயணம்


தென் மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், பாலஅருணாச்சலபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு. —

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பேட்டை கலவர பாதிப்புகளை பார்வையிட்ட புதிய தமிழகம் குழு!

திருநெல்வேலி, பேட்டை ஆஞ்சநேயர் தெரு பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் நடத்திய தடியடியில் பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணையின்படி மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேரடியாக சென்று தடியடியில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டது. உடன் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லப்பா, பேட்டை பகுதி செயலாளர் குமார் செட்டியார், பேட்டை பகுதி இளைஞரணி செயலாளர் சக்திவேல், பேட்டை பகுதி மாணவரணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அசோக், மாவட்ட தொண்டரணி செயலாளர் கார்த்திக் மள்ளர் , மானூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மறவர்களால் வெட்டப்பட்ட இரண்டு மள்ளர்கள் மற்றும் மள்ளர்களால் வெட்டப்பட்ட ஒரு மறவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இரு சமூகங்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தேவேந்திரகுல மக்கள் வாழக்கூடிய பகுதியில் காவல்துறை நடத்திய தடியடியில் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஒரு லோடு ஆட்டோ ஆகியவை தாக்கப்பட்டதோடு வீடுகளில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கோழை போலீசாரால் 10-க்கும் மேற்பட்ட மள்ளர்குல பெண்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு உள்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) ஆகியோரை நேரடியாக சந்தித்து புகார் செய்யப்படும். மேலும் டாக்டர் அய்யா அவர்களோடு ஆலோசனை செய்த பின்பு அடுத்தகட்ட போராட்டம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.