தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் மகராஜன்(31).
இவர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து புதிய தமிழகம் கட்சி கிளைச் செயலாளராக
உள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர் காமராஜர் நகரில் உள்ள
பொதுக்கழிப்பிடம் அருகே பைக்கை நிறுத்தினார். அப்போது அதே பகுதியைச்
சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டது.
இதில் சிலர் மகராஜனை தாக்கி
அரிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார்
செய்தார்.
அதன்பேரில் போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரூரல் டிஎஸ்பி நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக