சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று
அளித்த பேட்டி: சிவகாசி பட்டாசு ஆலை விபத்துக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள்
மற்றும் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமுமே பொறுப்பு. விபத்துக்கு
பொறுப்பேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் தனது பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இனிமேல் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை முறையாக
பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக
தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இமானுவேல் சேகரன் நினைவு நாள் நாளை
அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் தமிழக அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாளை அரசு
விழாவாக அறிவிக்காமல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது தாழ்த்தப்பட்ட
மக்களை கொச்சைப்படுத்தும் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக