எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தண்ணீர் லாரிகள் மீது தடையாணை: அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நிலத்தடி நீர் விற்பனை செய்வதை தடை செய்து வெளியிடப்பட்ட ஆர்டிஓ.,தடையாணையை அமல்படுத்தக் கோரி நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் நிலத்தடி நீர் எடுக்க கோவில்பட்டி ஆர்டிஓ.,தடையாணை பிறப்பித்தார்.
ஆனால் தொடர்ந்து நிலத்தடிநீர் லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் கொண்டு செல்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசினார். ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட பஞ்.,தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்எல்ஏ.,ராமசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஓட்டப்பிடாரத்தில் ஸ்டேட் பாங்க் விரைவில் துவக்கம் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தகவல்

ஓட்டப்பிடாரம், : ஓட்டப்பிடாரத்தில் பாரத ஸ்டேட் பாங்க் விரைவில் துவக்கப்பட உள்ளதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓட்டப்பிடாரத்தில் இது வரை எந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையும் துவக்கப்படவில்லை. வட்டார வளர்ச்சி அலுவல கம், தாலுகா அலுவலகம், பதிவு துறை, பள்ளிகல்வி, பொதுப்பணித்துறை உள் ளிட்ட எத்தனையோ அலுவலகங்கள் இருந்தும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், சத்துணவு பணியாளர் கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு இருந் தும் வங்கி இல்லாதது குறை யாகவே இருந்து வந்தது.
ஆசிரியர்கள் தேசிய வங்கி இல்லாத காரணத் தால் தமிழகத்திலேயே ஓட்டப்பிடாரத்தில் மட்டுமே இசிஎஸ் மூலம் சம்பளம் பெற முடியாத நிலை உள் ளது. வியாபாரிகளும், விவசாயிகளும் சாதாரண செல் லான் எடுக்க கூட அங்கிருந்து 20 கி.மீ அப்பால் செல்ல வேண்டிய துள்ளது. கடந்த 15 மாத காலமாக பாரத ஸ்டேட் பாங்கின் நெல்லை, சென்னை, மும் பை கிளை அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியதன் பேரில், இப் போது ஓட்டப்பிடாரத்தில் ஸ்டேட் வங்கி கிளை துவக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வங்கி செயல்பட துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை விபத்து : அமைச்சர் ராஜினாமா, கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று அளித்த பேட்டி: சிவகாசி பட்டாசு ஆலை விபத்துக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமுமே பொறுப்பு. விபத்துக்கு பொறுப்பேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இனிமேல் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இமானுவேல் சேகரன் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாளை அரசு விழாவாக அறிவிக்காமல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தும் செயல்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

கிரானைட் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

கிரானைட் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 160 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை முறையாக பராமரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல், கிரானைட் உள்ளிட்ட கனமவளங்கள் வரை முறையின்றி சுரண்டப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கனிமவள முறைகேட்டில் மொத்த மதிப்பீட்டில் ஒட்டு மொத்த இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை 10 ஆண்டுகளுக்கு தயாரிக்க முடியும்.

எனவே கிரானைட் முறைகேட்டை முழுமையாக கண்டறிய அதன் விசாரணையை மத்திய புலனாய்வு பிரிவிடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்க வேண்டும். மாநில சட்ட பேரவை அனைத்து கட்சி தலைவர்களை கொண்ட குழு அமைத்து அந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேலும் நேர்மையான அதிகாரிகளை கொண்ட குழு மூலம் விசாரணை மேற்கொண்டு ஒட்டு மொத்த முறைகேட்டையும் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் அனை வரும் தண்டிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய தமிழகம் சார்பில் செப்டம்பர் 17-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற் கொள்ளப்படும். அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு முழுக்கல்வி கட்டணத்தையும் ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டணத்தை அரசிடம் பெற்று கொள்ள வகை செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த நடைமுறை பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படுவது இல்லை.

இதற்கென நிதிநிலை அறிக்கையில் ரூ.118 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. எனவே தனியார் கல்லூரி நிர்வாகங்களை கண்டித்து வருகிற செப்டம்பர் 6-ந்தேதி மாநிலம் முழுவதும் தனியார் கல்லூரிகள் முன்பு முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை மறியல் போராட்டம் நடைபெறும்.

கிரானைட் முறைகேடு ரூ.16,000 கோடி அல்ல ரூ.1,80,000 கோடி: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

நெல்லை: மதுரையில ரூ.16,000 கோடி அல்ல ரூ.1, 80,000 மதிப்புள்ள கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரை மாவட்டத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். உண்மையில் 1,80,000 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள குளங்கள், சுடுகாடுகள், கோயில்கள் ஆகியவற்றின் வழிப்பாதைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 16ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது என்றார்.

புதிய தமிழகம் கட்சி செயலாளருக்கு வெட்டு

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் மகராஜன்(31). இவர் மாப்பிள்ளையூரணி  பஞ்சாயத்து புதிய தமிழகம் கட்சி கிளைச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர் காமராஜர் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே  பைக்கை நிறுத்தினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டது.
இதில் சிலர் மகராஜனை தாக்கி அரிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரூரல் டிஎஸ்பி நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்

நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை

நெல்லை: நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் பருவமழை பொய்த்து நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கும், விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மழை பெய்தால் கூட மழை நீரை சேமிக்கும் வகையில் திட்டங்கள் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 386 ஒன்றியங்கள் உள்ளன. இதில் 160க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர் குடிநீருக்கும், விவசாய பணிகளுக்கும் அதிகமாக பயன்படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி நிலத்தடி நீர் வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதில் சில சரத்துக்கள் கடுமையாக இருந்ததால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்து நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். கனிம வளத்தை நிரந்தரமாக பாதுகாக்க வலுவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் மாவட்டம்தோறும் புதிய தமிழகம் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள், நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்புகளை ஒன்றிணைத்து சைக்கிள் பேரணி நடத்துகிறோம் என்றார்