எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 21 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்




சென்னை : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. வீடு இழந்தோருக்கு ரூ.2,500 தமிழக அரசு வழங்குகிறது.

அதை வைத்து வீடு கட்ட முடியாது. எனவே, அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். பலா, முந்திரி தோப்பு வைத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தென்தமிழகத்தில் 2001ம் ஆண்டுக்கு பிறகு எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருந்தனர். அதை சீர்குலைக்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக