Jan 12, 2012 Views: 12
பசுபதி பாண்டியனின் உடல் அடக்கம் செய்த நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் பசுபதி பாண்டியனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி செய்ய வேண்டும் அவருடைய குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் நடந்த வன்முறை தென் மாவட்ட மக்கள் எல்லோரும் சமுதாய இணக்கமான சூழ்நிலையில் உள்ளனர். பகைமையை வளர்க்க விஷமிகள் வந்து திட்டமிட்டு சதி செயலில் ஈடுபடுவதால் தேவேந்திர குல இளைஞர்கள் பலியாக வேண்டாம். தலித் இன தலைவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக