எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 30 அக்டோபர், 2014

தமிழக அரசே, சாகாயம் விசாரணைக்கு ஆணை வழங்கு! பால் விலை உயர்வை வாபஸ் வாங்கு- டாகடர்.க்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்..


தமிழகத்தில் நடைபெற்றுள்ள கணிமவள கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சகாயம் (இ.ஆ.ப) சிறப்பு விசாரணை குழுவுக்கு தமிழக அரசு உடனடியாக ஆனை வழங்கிட வலியுறுத்தியும், தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர்.டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு திரு.சகாயம் விசாரணைக்கு ஆனை வழங்கவும், பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் அனைத்து ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள்,மாநில அமைப்பு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக