எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பால் அவையில் சிரிப்பலை..




சட்டசபையில் கவன ஈர்ப்பு தொடர்பான விவாதம் முடிந்த பிறகு, உறுப்பினர்கள் ஒரு சிலர் எழுந்து, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டனர். அதில் டாக்டர் கிருஷ்ணசாமியும் (புதிய தமிழகம்) ஒருவர். அவர் பேசும்போது, நான் இந்த அவையில் 50-க்கு மேற்பட்ட கவன ஈர்ப்புகளை கொண்டு வந்துள்ளேன். ஆனால் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றார். தொடர்ந்து அவர் பேச முயன்றபோது, சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. 

அதனைத் தொடர்ந்து, வலது கையை உயர்த்திக்காட்டி, அவையை விட்டு வெளியேறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறி புறப்பட்டார். அப்போது அவரது கையை உறுப்பினர் சரத்குமார் (தென்காசி தொகுதி) பிடித்து, தாங்கள் எழுத வாங்கிய என்னுடைய பேனாவை தந்துவிட்டு போங்கள் என்று

சைகையிலேயே குறிப்பிட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதன்பின்னர், சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்து சரத்குமாரிடம் கொடுத்துவிட்டு உறுப்பினர் கிருஷ்ணசாமி வெளியேறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக