எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 13 நவம்பர், 2013

புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்...


மீத்தேன் வாயு எடுப்பதை மத்திய அரசு கைவிட வேண்டுமெனக் கோரி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் புதிய தமிழகம் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர்  நாக. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ஆர். சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
நாகை மாவட்டச் செயலர் எஸ்.டி. சூர்யா, முன்னாள் நாகை மக்களவை தொகுதி  அமைப்பாளர் ஆரூர். இளமுருகு, மன்னை  ஒன்றியச் செயலர் கே. தம்புசாமி, நீடாமங்கமல் ஒன்றியச் செயலர்  த. சுரேஷ்கண்ணன், தங்க. இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக