வெள்ளி, 29 நவம்பர், 2013
செவ்வாய், 26 நவம்பர், 2013
நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தென்காசி, நவ. 24–
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றாலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து நடத்திய நீதி விசாரணை அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 30–ந்தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த பகுதியில் கிடைக்கும் ஈத்தலை வெட்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழில் அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக ஈத்தல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது கண்டனத்துக்குரியது. தடையை ரத்து செய்து தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் எவ்வளவோ மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதே போல் நெல்லையில் இருந்து தென்காசியையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்தேன். இம்மாத இறுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். வருகிற டிசம்பர் 15–ந் தேதி முதல் 3 மாதங்கள் விழித்திரு தமிழா, எழு தமிழா என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.
ஞாயிறு, 24 நவம்பர், 2013
வெள்ளி, 22 நவம்பர், 2013
பரமக்குடி துப்பாக்கிச்சூடு: சி.பி.ஐ. விசாரணைக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை!
சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது.

புதன், 20 நவம்பர், 2013
மொரிஷியஸில் ஒன்றிணைந்த தமிழர்கள் ...
ஈழத் தமிழர்களை காக்கத் தவறினால்..? மொரிஷியஸில் ஒன்றிணைந்த தமிழர்கள் ஆப்ரிக்க கண்டத்தின் தென் கிழக்குக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவு மொரிஷியஸ். இங்கு போஜ்புரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். மொரிஷியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் மாநகரில் கடந்த 8, 9, 10-ம் தேதிகளில் 'புலம்பெயர் தமிழர் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டை மொரிஷியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பும் அனைத்துலக ஈழத் தமிழர் அவையும் இணைந்து ஏற்பாடு செய்தன. இந்த மாநாட்டுக்கு இந்தியா, இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஃப்ரான்ஸ், அமெரிக்கா என 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்களின் பிரதிநிதிகளும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான மொரிஷியஸ் தமிழர்களும் குவிந்தனர். தமிழகத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக ரோஸ்ஹில் மாநகர மேயர் வந்திருந்தார். 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இறந்துபோன தமிழர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் வகையில் தமிழ் ஈழம் என்று பொறிக்கப்பட்ட நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூணுக்கு ஒவ்வொருவரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இரண்டாம் நாள் நிகழ்வு கிராண்ட் பே-வில் உள்ள ஐசிசி ஹாலில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் அதிபர் ராஜ்கேஷ்வர் புரியாக்-கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் மொரிஷியஸின் முன்னாள் பிரத மருமான பால் ரேமண்ட்-டும் கலந்து கொண்டனர். இதில் பேசிய பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ''இப்போது ஈழத் தமிழர்களைக் காக்கத் தவறினால் மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா என 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்'' என்றார். அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் பொதுச் செயலாளர் திருச்சோதி, ''இரண்டரை லட்சம் மக்களை இழந்து அநாதைகளாக இருக்கிறோம். 90 ஆயிரம் விதவைகளையும், 40 ஆயிரம் ஊனமுற்றவர்களையும், 30 ஆயிரம் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறோம். தாய்த் திருநாடான இந்தியா எங்களை கைவிட்டது மன வருத்தத்தை அளிக்கிறது'' என்றார். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மொரிஷியஸ் அதிபர் ராஜ்கேஷ்வர், ''தமிழ், உலகத்தின் பாரம்பரியம் மிக்க செம்மொழி. தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆரம்ப காலகட்டத்தில் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு மொரிஷியஸின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கின்றனர். இப்போது பல துறைகளிலும் தொழில் அதிபர்களாக இருந்து மொரிஷியஸ் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு மொரிஷியஸ் அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். இலங்கையில் நடைபெற்ற இனப் பேரழிவைப் பற்றி பேசினார்கள். மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது'' என்றார். மொரிஷியஸின் முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சித் தலைவருமான பால் ரேமண்ட், ''தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், 'இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது’ என்று தீர்மானம் போட்டிருக்கிறார். எங்கள் கட்சியின் சார்பாக மொரிஷியஸ் பிரதமரும் இந்த மாநாட்டுக்குப் போகக் கூடாது என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழ் ஈழத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்'' என்றார். மூன்றாம் நாள் நிகழ்வு காலை 9 மணிக்கு கிராண்ட் பே-வில் உள்ள ஐசிசி ஹால், கலோடைன் ஹோட்டலில் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதி புஷ்பராணி மாநாட்டின் தீர்மானமாக இல்லாமல் மொரிஷியஸ் தமிழர்களின் பிரகடனமாக கலாசார, சமூக, பொருளாதார, அரசியலில் தமிழர்கள் எப்படி கோலோச்சுவது என்று பேசினார். இந்த மாநாட்டை அடுத்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வதை மொரிஷியஸ் பிரதமர் புறக்கணித்துள்ளார். அதோடு, அங்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணுக்கு அந்த அரசு மரியாதை செலுத்துகிறது. இங்கு? - நன்றி-ஜூனியர் விகடன்
திங்கள், 18 நவம்பர், 2013
புதன், 13 நவம்பர், 2013
புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்...
மீத்தேன் வாயு எடுப்பதை மத்திய அரசு கைவிட
வேண்டுமெனக் கோரி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் புதிய
தமிழகம் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் நாக. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ஆர். சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
நாகை மாவட்டச் செயலர் எஸ்.டி. சூர்யா, முன்னாள் நாகை மக்களவை தொகுதி அமைப்பாளர் ஆரூர். இளமுருகு, மன்னை ஒன்றியச் செயலர் கே. தம்புசாமி, நீடாமங்கமல் ஒன்றியச் செயலர் த. சுரேஷ்கண்ணன், தங்க. இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சம்பத் கமிஷன் அறிக்கையை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
சம்பத் கமிஷன் அறிக்கையை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பரமக்குடி
சம்பவம் குறித்த சம்பத் கமிஷன் அறிக்கையை கண்டித்தும், திரும்ப பெற
வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணிச் செயலாளர் காளீஸ்வரி மற்றும் மாணவரணி செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், பரமக்குடி சம்பவம் குறித்த சம்பத் கமிஷன் அறிக்கை தலித் மக்களுக்கு எதிராக இருப்பதால் உடனே திரும்ப வேண்டும். மேலும், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிஷன் போல் இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்க கூடாது மற்றும் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் முன்பு நான்கு வழிச்சாலையில் நீதிபதி சம்பத்தின் கொடும்பாவியை புதிய தமிழகம் கட்சியினர் எரித்தனர். அதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து கொடும்பாவியை அப்புறப்படுத்தினர்.

சபாநாயகர் இருக்கை அருகே சென்று தர்ணா: சட்டசபையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்...
காமன்வெல்த்
மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை
முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். இந்த தீர்மானத்தின் மீது கட்சி
தலைவர்கள் பேசினர்.
தமிழர்களின்
உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்
பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
புதிய
தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, ‘காமன்வெல்த் விவகாரம்
தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க வேண்டும்’ என்று
வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு
தெரிவித்து கோஷமிட்டனர்.
அதேசமயம்
கிருஷ்ணசாமி, சபாநாயகர் இருக்கை அருகே சென்று தர்ணாவில் ஈடுபட முயன்றார்.
இதனால் அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
|
பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்..
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, பிரதமர்
மட்டும் கலந்துகொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதால் அவர்
கலந்துகொள்ளவில்லை. ஒருவரும் கலந்துகொள்ளக்கூடாது என்று தீர்மானம்
நிறைவேற்றியிருந்தால் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்.அமைச்சர் நத்தம்
விஸ்வநாதன்: இங்கு கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு பிரதமர்
மதிப்பளித்திருந்தால் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்.
இந்த விஷயத்தை கிருஷ்ணசாமி மூடி மறைக்கப்பார்க்கிறார். அமைச்சர்
கே.பி.முனுசாமி: இப்படிப்பட்ட கூட்டத்தில் தமிழர்களின் உணர்வுகளை
நீர்த்துப்போகச் செய்து விடாதீர்கள். அப்போது பரமக்குடி சம்பவம் குறித்து
பேச ஆரம்பித்தார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை.பேரவைத் தலைவர்:
ஒரு முக்கியமான தீர்மானத்தின் மீது பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கொடுத்த நேரத்தை பயன்படுத்தவில்லை, உட்காருங்கள். (தொடர்ந்து கிருஷ்ணசாமி பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நின்றுகொண்டேயிருந்தார்) பின்னர் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹீருல்லாவைப் பேசுமாறு பேரவைத் தலைவர் அழைத்தார். ஜவாஹீருல்லா பேசத் தொடங்கினார். அப்போதும், கிருஷ்ணசாமி நின்றுகொண்டு பேரவைத் தலைவரிடம் பேச அனுமதி கேட்டார். ஜவாஹீருல்லா பேசி முடித்தவுடன் மீண்டும¢ கிருஷ்ணசாமி பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை முன்பு கிருஷ்ணசாமி அமர்ந்து தர்ணா செய்தார். இதையடுத்து, அவரை பேரவையிலிருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அவரை பேரவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013
திருச்சியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..
ஆசிரியர் தகுதித் தேர்வினை
இடஒதுக்கீட்டு முறையில் நடத்தக் கோரி புதிய தமிழகம் கட்சியினர் இன்று
திருச்சி சந்திப்பு காதிகிராப்ட் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வில்
வெற்றி பெற முடிவதில்லை என்றும், இதனால் அவர்கள் பெரிதும்
பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)