எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 17 ஜனவரி, 2013

பா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

பா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


கரூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவுகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.13 ஆயிரம் வழங்கவேண்டும். டெல்டா பகுதியில் அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

இதுபோல தமிழகத்தில் மேற்கு மற்றும் மத்திய மாவட்டகளிலும் ஏற்பட்டுள்ள வறட்சி பகுதிகளை அமைச்சர்கள் குழுவினரை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும். தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை மற்ற மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 14 மணிநேரம் முதல் 16 மணிநேரமும் மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக மின்சாரம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.

உட்பிரிவு சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அபற்றி எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே அடுத்த மாதம் 6-ந்தேதி அனைத்து ஒன்றியங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேச்சு சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. அவர் மதுரையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் அத்தகைய நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ராமதாஸ் நடந்து கொண்டது முறையல்ல. வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெறகோரி பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபற்றி அவர்கள் போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் பா.ம.வை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக