எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 22 ஜூன், 2012

ஜூலை 9-ல் முற்றுகை போராட்டம்: கிருஷ்ணசாமி

  தூத்துக்குடி, ஜூன் 20: மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 9-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.  தூத்துக்குடியில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:  தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியில் பெரும்பான்மையான மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிலப்பட்டா மாற்றத்தை, வீட்டுமனை பட்டா வழங்குவதுபோல் கணக்கு காட்டப்படுகிறது. இதுபோல் முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவித்தொகை கேட்டு மனு அளித்து வருகின்றனர். ஆனால், அவர்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த மே 20, 21 தேதிகளில் நடைபெற்ற மனுநீதி நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினேன். இதுவரை அந்த மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 10, 15 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கிறது. எனவே இதைக் கண்டித்து ஜூலை 9-ம் தேதி எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக