எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 3 மார்ச், 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் ஆதரவு


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, 18.3.2012 அன்று நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முத்துச்செல்விக்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது, கழக பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக