புதிய தமிழகம் கட்சிக்கென்று சங்கரன்கோவில் தொகுதியில் கனிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனிடையே இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்துவதா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என்பன போன்ற கேள்விகளை மக்களிடம் கலந்து ஆலோசிபதற்காக 24.02.2012 அன்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஈச்சந்தா நடுவக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்றார்.
அங்கே அவரது ஆதரவாளர்களையும், மக்களையும் சந்தித்த அவர், தேர்தல் பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தலைவர் (கிருஷ்ணசாமி) எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றனர்.