எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


 

ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தமிழக முதல்வர் ஜெயலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் விதவை, முதியோர், ஊனமுற்றோர் உதவித் தொகையினை ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார். ரேசன் கார்டு இல்லாத நபர்களுக்கு உடனடியாக ரேசன் கார்டுகள் வழங்கிடவும் அறிவிப்பு வெளியிட்டார். 

அதனடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நான்கு இடங்களில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கிராமம் தோறும் நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடத்தியும் மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்கள் அனைத்தும் அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை செய்யப்பட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை ஓட்டபிடாரத்தில் ரேசன்கார்டுகள் மற்றும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
தனித் துணை ஆட்சியர் லதா, தாசில்தார் மணி, துணை தாசில்தார் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாமணி, சமூக நலத்திட்ட தாசில்தார் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட விதவைகள், முதியோர், ஊனமுற்றோருக்கான தமிழக அரசின் உதவித் தொகைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 271 நபர்களுக்கு இந்த உதவிக் தொகையினை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் வழங்கினார். மேலும் 70 நபர்களுக்கு ரேசன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டது. முப்பத்தி இரண்டு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் மதிப்பிலான தேசிய ஊனமுற்றோர் உதவித் தொகை, ஆதரவற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கான விதவைகள் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக