எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 27 மே, 2014

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய் பங்கேற்பது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து ......


நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா நாளை மாலை 6 மணிக்கு புதுடெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
சார்க் நாடுகளின் தலைவர்கள் என்கிற முறையில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் வலுத்துள்ளன. இதையடுத்து, ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் மோடியை வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே ராஜபக்சே வருகையை கண்டித்து நேற்று சென்னை பாரதீய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழ் உணர்வு கொண்ட எவரும் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொள்ளக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’உலகம் முழுவதிலுமிருக்கும் தமிழர்கள் அனைவரும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தற்போது மோடி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது’’ என்றார்.
மேலும், மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர்.கிருஷ்ணசாமி, ''இதில் நான் எந்த வேற்றுமையையும் விதைக்க விரும்பவில்லை. ஆனால், ராஜபக்சேவின் வருகையை பொறுத்தவரையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
· 

புதன், 21 மே, 2014

எனதருமை புதிய தமிழகம் கட்சி தோழர்களே...........

 2014 தென்காசி லோக்சபா தேர்தலில் நாம் வீழ்ந்து விட்டோம் என்றும் நமது தலைவர் டாக்டர் அய்யாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாமல் தோற்று விட்டோம் என்றும் நீங்கள் ஒரு போதும் சோர்வடைய வேண்டாம். நமது புதிய தமிழகம் கட்சி தோழர் ம.பிலிப் அந்தோணி,தோழர் பாரதி தேவேந்திரன் மற்றும் தோழர் விக்னேஷ்(குழந்தை) தேவேந்திரன் போன்ற நூற்றுக்கணக்கான தியாகிகள் தங்களது உயிரை தியாகம் செய்து அதனால் வுருவாக்கபட்ட ஒரு மாபெரும் இயக்கம். நமது இயக்கத்திற்கு என்றுமே அழிவே கிடையாது. தோல்வியை கண்டு ஒருபோதும் புதிய தமிழகம் அஞ்சாது. 2016 மற்றும் 2019ம் ஆண்டு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள இப்பொழுதே நாம் நம்மை தயார் செய்வோம். தென் தமிழகத்தில் தேவேந்திர குல மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நமது ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் இணைத்து புதிய தமிழகம் என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்தவர் நமது சமூக நீதி போராளி டாக்டர் அய்யா. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பிற வுதவாகரை கட்சிகளில் இருக்கும் தேவேந்திர குல சொந்தங்களே நீங்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி புதிய தமிழகம் கட்சியில் இணைந்து எங்களது கள போராட்டத்திற்கு வாருங்கள். ஓரணியில் இணைந்து நாம் அடக்குமுறைக்கு எதிராக போராடி நமது வுரிமைகளை மீட்போம். 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் மிகபெரும் சக்தியாக வுருவெடுத்து உலக தமிழர்களின் தலைவராக டாக்டர் அய்யாவை ஆக்குவோம்.
தமிழ் தேசிய இனத்தின் அக முரண்பாடுகளை களைவோம், தமிழராக எழுவோம்.

திங்கள், 19 மே, 2014

தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி ...?


காமராசரையே தோற்கடிக்க செய்தவர்கள்தானே நாம்.
டாக்டர் அய்யாவை தோல்வியடைய செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை..
என்ன செய்யுறது? ஜெயித்திருந்தால் நம் சார்பாக பேச இந்திய நாடாளுமன்றத்தில் ஒருவர் இருந்திருப்பார். இப்போது இல்லை. அவ்வளவே!!
டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அவரது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.

தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி ..?


தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி தோற்று விட்டதால் பெரு மகிழ்ச்சி கொள்ளும் சில எனதருமை தேவேந்திரகுல சகோதரர்களே, புதிய தமிழகம் கடந்த 15 வருட கள போராட்டத்தில் எத்தனையோ வெற்றி தோல்விகளை சந்தித்து வந்து இருக்கிறது.டாக்டர் கிருஷ்ணசாமி தோற்று விட்டதால் இழப்பு அவருக்கு அல்ல, நமக்கு தான். மிகவும் நேர்மையான துணிச்சலான கள போராளியான டாக்டரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாமல் நாம் தோற்று விட்டோம். இந்த 2014ம் ஆண்டில் 2,62147 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளோம். வரும் 2020ம் ஆண்டில் தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பாக வெற்றி மகுடம் சூட்ட போகதான் போகிறார். தோல்விகளில் இருந்து மீண்டு மீண்டும் எங்களது கள போராட்டத்திற்கு திரும்புவோம்.
எமக்கு தொழில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுதல், சாதியத்தை ஒழிப்போம், சம தர்ம புதிய தமிழகம் படிப்போம்.
விழ விழ எழுவோம் வீழ்ந்து விட மாட்டோம் சகோதரர்களே...
எங்களது கள போராட்டம் தொடரும் .......

வியாழன், 1 மே, 2014

தேர்தல் கமிஷனுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்து பணத்தை வாரி இறைத்துள்ளார்: டாக்டர் கிருஷ்ணசாமி.


கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,
திமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்கு சேகரித்ததற்காக திமுக தலைவர் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். வாக்காளர்களுக்கு அதிமுகவினர் வழங்கிய பணத்தை மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் துணையுடன் அதிமுக வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளது. இந்த ஜனநாயக படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைஞரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் விரைவில் திமுக கூட்டணித் தலைவர்களை அழைத்து இதுபற்றி பேசி முடிவு எடுப்பதாக கூறினார். 
தேர்தல் கமிஷனுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்து பணத்தை வாரி இறைத்துள்ளார். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும், தான் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் வாக்குச்சாவடிக்குள்ளேயே அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். தேர்தல் பொறுப்பாளரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் நேரடியாக 
களத்தில் இறங்கி பணப்பட்டுவாடா செய்தனர் என்றார்