எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம்





தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:

விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் "ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.

முதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

புதிய தமிழகம் கட்சி - மும்முனை போராட்டம்



புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் -தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி:-
விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கக்கூடிய சமுதாயங்களின் எழுச்சிக்கு பொருளாதார சலுகைகள் அளித்தால் மட்டும் போதாது. அச்சமுதாய மக்களுடைய அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசின் கொள்கைகளாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் இன்னும் ன்விகிதி வைத்தே ஒருமையில் அழைக்கப்படுகிறார்கள். இந்த தொடரும் சமூக இழிவு நிலையே அம்மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பட்டியலினப் பிரிவில் உள்ள பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர்என அழைக்க அரசானை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.
அதே போன்று இடஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டை ஒரே ஒரு பிரிவினருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள 70 சமுதாய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இடஒதுக்கீடுகள் வழங்க இந்திய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளான மக்களை அண்ணல் அம்பேத்கார் அவர்கள் அட்டவனைப் பிரிவினர் என வகைப்படுத்தினார். ஆனால் அதை தமிழ்நாடு அரசு ஒரு சாதியின் துறையாக மாற்றிவிட்டது.
எனவே பட்டியலின துறைக்கு  ‘சமூக நீதித்துறை’ அல்லது  ‘பட்டியலினத்துறை’ என்றே பெயரிடவும், உள்இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யவும் தேவேந்திரகுல வேளாளார்என அழைக்க அரசானை பிறப்பிக்கவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மும்முனை போராட்டம் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் 1 மணி வரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும்.
20ம் தேதி : திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர்
21ம் தேதி : மதுரை, விருதுநகர்,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி   கடலூர்
22ம்தேதி : துத்துக்குடி, திருநெல்வேலி,திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவாரூர்
23ம் தேதி : இராமநாதபுரம், சேலம்,நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி வேலூர்
24ம் தேதி : சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரி
ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

நாடாளுமன்றத் தேர்தல்: எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய கம்யூனிஸ்டா? டாக்டர் கிருஷ்ணசாமியா?

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில் இக் கூட்டணியை விட்டு புதிய தமிழகம் வெளியேறியது. அடுத்த தேர்தலில் தனித்தே போட்டி என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துவிட்டாலும் கூட்டணியை தொங்கிக் கொண்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ குணசேகரன் கூறுரையில், சில்லறை வர்த்தகம், தகாவிரிப் பிரச்சனை உள்பட அனைத்து விவகாரங்களிலும் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார். பின்னர் தனது பேச்சை நிறைவு செய்கையில், சனி பிணம் தனியாகப் போகாது என்பதைப் போல காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு விரைவில் சனி பிணமாகச் செல்ல இருக்கிறது. அவர்களோடு சேர்ந்து சில கட்சிகளும் போக உள்ளன. டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, நாங்கள் எப்போதும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தான் மாறிமாறி வேறு வேறு அணிகளுக்குப் போகிறீர்ர்கள். நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். இதையடுத்துப் பேசிய குணசேகரன், ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோதுதான் கம்யூனிஸ்ட்டுகள் அந்த அணியில் இடம் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தோமே தவிர, மற்ற எதிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது இல்லை என்றார். இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆறுமுகம் பேசுகையில், தேசிய மாநாடுகளில் ஆய்வு செய்த பிறகே அனைத்து முடிவுகளையும் இடதுசாரிகள் எடுக்கின்றனர். குணசேகரன் தேர்தல் தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணசாமி ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறார் எனத் தெரியவில்லை என்றார்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

ஆளுநர் உரையில் எந்த புதிய செய்திகளுமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி





தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (30.01.2012) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் எம்எல்ஏ டாக்டர் கிருஷ்ணசாமி,

இன்று ஆளுநர் ரோசய்யா அவர்களின் உரையில், தமிழ்நாட்டில் இந்த ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகின்ற நிலையிலும் தொடரும் மின்வெட்டு, தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை போன்றவற்றிற்கு ஒரு தீர்வு காணக் கூடிய வகையில் எந்த புதிய செய்திகளுமே இதில் இல்லை என்றார்.